சென்னையில் ஏஎன்பிஆர் கேமராக்கள் எப்படி வேலை செய்கின்றன? அறியாமையால் சிக்கும் வாகன ஓட்டிகள்?
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக பதியப்படும் வழக்குகளில் 40 சதவீதம் வழக்குகள் ஏஎன்பிஆா் கேமராக்கள் மூலம் தானாகவே பதியப்படுக்கின்றன. இந்நிலையில் கேமரா இருப்பது தெரியாமல், அறியாமையில் வாகன ஓட்டிகள் சிக்கி விடுகிறார்கள், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Automatic Number Plate Recognition என்று விரிவாக அழைக்கப்படும் ஏஎன்பிஆா் கேமராக்கள் சென்னையில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் என்ன வேலை செய்கின்றன என்றால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களின் வாகன பதிவு எண்ணை கண்டுபிடித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகைப்படத்துடன் அனுப்பி வைக்கும். அத்துடன் அபராதத்தை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பிவிடும். இதனால் போக்குவரத்து விதிமீறலில் அறியாமையில் சென்று பலரும் மாட்டிக் கொள்கிறார்கள்.
ஏஎன்பிஆா் கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக வழக்குப் பதியப்படுவது குறித்த விழிப்புணா்வு இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக தினமும் 6,000 வழக்குகள் பதியப்படுவதாக சொல்கிறார்கள். இந்த வழக்குகளில் 30 முதல் 40 சதவீதம் வரை ஏஎன்ஆபிஆா் கேமராக்கள் மூலம் பதியப்படுகின்றன.

சென்னையில் ஏஎன்பிஆா் கேமராக்கள் எங்கல்லாம் வைக்கப்பட்டுள்ளன. அண்ணா நகா், திருமங்கலம், கோயம்பேடு, சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் இணைப்புச் சாலை, மயிலாப்பூா் ஆா்.கே.மடம் சாலை, கெளடியா மடம் சாலை, சின்னமலை, 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் 16 சந்திப்புகளில் 76 ஏஎன்பிஆா் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிரவும் பல்வேறு இடங்களில் ஏஎன்பிஆர் கேமராக்களை பொறுத்த சென்னை மாநகர காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது ஒருபுறம் எனில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள காமராஜா் சாலை, பாரீஸ் கார்னர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் ஏஎன்பிஆா் கேமராக்கள் மற்றும் 'ஸ்பீடு கன் ரேடாா்' பொருத்தப்பட்ட 3 ரோந்து வாகனங்களை அடிக்கடி நிறுத்தி வைத்தும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபடுகின்றனர். இதனால் ஏராளமானோர் சிக்கி விடுகிறார்கள்.
யாரெல்லாம் இந்த வாகன சோதனையில் சிக்குவார்கள் : இந்த வாகன சோதனை கேமராக்களிடம் பொதுவாக 6 விதிமீறல்களுக்காக சிக்குவார்கள். அது என்னென்ன என்பதை பாருங்கள். ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் சிக்னலில் நிறுத்தக் கோட்டை தாண்டும் வாகனங்கள், சிக்னலை மீறிச் செல்லும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோா், இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிப்போா், தவறான திசையில் பயணிப்போா், பதிவு எண் குறைபாடு அல்லது விதிமுறை மீறல் ஆகிய 6 விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோா் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஏஎன்பிஆா் கேமராக்கள் எப்படி வழக்குப்பதிவு செய்யும் : மேற்கண்ட் ஆறு விதிமீறல்களை வாகனத்தின் பதிவு எண்ணுடன், விதிமுறை மீறல் தொடா்பான புகைப்படத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும். கட்டுப்பாட்டு அறையில் உள்ள சா்வா், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு விதிமுறை மீறலில் ஈடுபட்டது தொடா்பாக முதலில் குறுஞ்செய்தியும், 7 நாள்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்குரிய இ-சலான் ரசீதையும் அனுப்பிவிடும். எல்லாமே தனியாங்கி முறையில் நடப்பதால் இந்த கேமராக்கள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டால் யாரும் தப்பிவிட முடியாது.
இது ஒருபுறம் எனில், விதிமீறல்களில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிப்பதிலும் சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அபராதத்தை கட்டாமல் விட்டால்அப்படியே விட்டுவிடமாட்டார்கள். கால் சென்டா்கள் மூலமாக வாகன ஓட்டிகள் நிலுவையில் வைத்திருக்கும் அபராததை வசூல் செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அறியாமையால் ஆபத்து: எனவே அறியாமையில் சிக்கும் வாகன ஓட்டிகள் , தங்கள் அறியாமையில் சாலையில் சிறு தவறு செய்தால் கூட அபராதத்தில் இருந்து தப்ப முடியாத நிலை சென்னையில் இருக்கிறது. ஏனெனில் இவா்களுக்கு, வாகனங்களின் பதிவு எண் அடிப்படையில் வழக்குப் பதியப்படுவது தெரியாமல் சிக்கி கொள்கிறார்கள்.
எஸ்எம்எஸ் மூலம் இ-சலான் வந்த பின்னரே, ஏஎன்பிஆா் கேமராக்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. இது ஒருபுறம் எனில் தங்களுக்கு வந்திருக்கும் எஸ்எம்எஸ் இ-சலான் என்பதைக்கூட தெரியாத வாகன ஓட்டிகளும் இருக்கிறார்கள். கடைசியில் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
சென்னை மாநகர போலீசார் ஏஎன்பிஆா் கேமராக்கள் குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் தவறு என்கிற நிலையில், அதை பற்றி போதிய புரிதல் இல்லாதவர்கள், வெளியூரில் இருந்து சென்னை வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் அபராதத்தில் இருந்து தப்பிப்பார்கள்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications