மாமியாரின் கள்ளக்காதல்.. அடங்காமல் அட்டகாசம்.. மருமகனின் பகீர் காரியம்.. பாடியில் பரபரப்பு
மாமியார் கள்ளக்காதல் காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
சென்னை: சொல்ல சொல்ல மாமியார் கேட்கவில்லை.. தன்னுடைய கள்ளக்காதலையும் யாருக்காகவும் கைவிட தயாராக இல்லை.. இதனால் பொறுமையிழந்த மருமகன், கள்ளக்காதலனை அடித்து கொன்றே விட்டார்.. இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
மகளுக்கு துரோகம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணை தேடி செல்லும் மருமகன்கள் ஏராளம் உண்டு.. பெற்ற மகளின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, மருமகனை கொல்ல துணிந்த மாமியார்கள் கைதான சம்பவங்களும் நடந்துள்ளன.
ஆனால், இங்கு ஒரு மாமியாருக்கு கள்ளக்காதல் வந்துள்ளது.. அதுவும், 34 வயது இளைஞருடன்.. இதுதான் ஒரு கொலை வரை கொண்டு சென்றுவிட்டுள்ளது.

நண்பர்
சென்னை பாடி கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி.. 34 வயதாகிறது.. இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. கார், பைக்குகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருபவர்.. இவரது நண்பர் ஒருவர் பாடியில் இருக்கிறார்.. அவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு அந்த நண்பரின் மனைவியுடன் கோபிக்கு பழக்கம் ஏற்பட்டது.

நந்தகுமார்
ஆரம்பத்தில் 2 பேரும் சாதாரணமாகத்தான் பேசி வந்துள்ளனர்.. நாளுக்கு நாள் அது கள்ளக்காதலாக பற்றிக் கொண்டுவிட்டது.. 2 பேரும் பல இடங்களுக்கு சென்று வந்தும், ஜாலியாக ஊர் சுற்றி வந்தததாகவும் தெரிகிறது.. அப்படித்தான் இவர்கள் ஊரை சுற்றும்போது, இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணின் மருமகனுக்கு தெரிந்துவிட்டது. அவர் பெயர் நந்தகுமார்.

கள்ளக்காதல்
மாமியாரின் கள்ளக்காதலை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், நேரடியாகவே இதை பற்றி அவரிடம் கேட்டுவிட்டார்.. உடனடியாக கள்ளக்காதலை கைவிடுமாறும் சற்று கடுமையாக கண்டித்துள்ளார்... அதுமட்டுமல்ல, கள்ளக்காதலன் கோபியையும் நந்தகுமார் வார்னிங் தந்துள்ளார். இனிமேல் தன்னுடைய மாமியாரை பார்க்க வீட்டுக்கு வர கூடாது, அப்படியே மீறி வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் கோபியை மிரட்டி உள்ளார்.. ஆனாலும் இந்த கள்ளஜோடி எதற்குமே அசரவில்லை.

ரத்த காயம்
இந்த நிலையில், கடந்த 22ம் தேதி கோபி தன்னுடைய கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார்... இந்த விஷயம் நந்தகுமார் காதுகளுக்கு எட்டியதுமே டென்ஷன் ஆனார்.. உடனடியாக வீட்டுக்கு சென்று கோபியிடம் சத்தம் போட்டுள்ளார். இதனால், கோபிக்கும், நந்தகுமாருக்கும் தகராறு ஏற்பட்டது... இந்த தகராறு ஒருகட்டத்தில் அடிதடியாக உருவெடுத்தது.. கோபியை நந்தகுமார் சரமாரியாக தாக்கி அடித்து உடைத்துள்ளார்.. இதில் பலத்த ரத்த காயம் அடைந்த கோபியை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணை
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கோபியின் அம்மா, கொரட்டூர் போலீஸில் புகார் தந்ததையடுத்து, நந்தகுமாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்... இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.. எனவே, இதை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... மாமியார் கள்ளக்காதலை கைவிடாததால், மருமகன் கொலை வரை சென்ற சம்பவம் பாடி மக்களை அதிர்ச்சியில் வைத்து வருகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications