சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள்
சென்னை: இன்ஸ்டாகிராம் தோழியின் அப்பா உயிருக்கு போராடுகிறார் என்று உதவி கேட்க போய், கடைசியில் பல லட்சம் ரூபாய் ஐஸ்வர்யாவின் மோசடியில் போய் முடிந்திருக்கிறது.. சிங்கப்பூரில் கைநிறைய சம்பளம் என ஆசை காட்டி, படித்த பட்டதாரி பெண்களையே வலையில் வீழ்த்தியது ஒரு இளம்பெண்ணா என்பதை அறிந்து ஒட்டுமொத்த போலீசாரும் ஆடிப்போய்விட்டார்கள்.. என்ன நடந்தது சென்னையில்? யாரிந்த இளம்பெண் ஐஸ்வர்யா?
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுஷ்மிதா.. 24 வயதாகிறது.. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் மனு தந்துள்ளார்.. அப்போதுதான் ஐஸ்வர்யா என்ற பெண்ணின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது..

சென்னை கமிஷனர் ஆபீஸ்
கமிஷனர் அலுவலகத்தில் சுஷ்மிதா அளித்த பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு மலேசியாவை சேர்ந்த ரேகா, சென்னையை சேர்ந்த துர்கா மற்றும் ஐஸ்வர்யா போன்றோர் தோழிகளாக அறிமுகம் ஆனார்கள்..
இந்த நிலையில், ஐஸ்வர்யா அவரது அப்பாவுக்கு அவசர ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறினார்.. தோழிகளான நாங்கள் அவருக்கு அடிக்கடி பணம் உதவி செய்து வந்தோம்.. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா தனியார் நிறுவனத்தில் தான் வேலை பார்ப்பதாகவும், தன்னால் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தர முடியும் என்றும் எங்களிடம் கூறினார்..
சிங்கப்பூரில் $4000 நல்ல சம்பளம்
நான் சென்னையில் பிரபல நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்து வருகிறேன்.. இதனால் ஐஸ்வர்யா சொன்ன வேலையில் சேர எனக்கு விருப்பம் இல்லை.. இருந்தாலும் சிங்கப்பூரில் செயல்படும் அந்த நிறுவனத்தில் மாதம் 4000 டாலர் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஐஸ்வர்யா தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.. அவர் எந்நேரமும் வற்புறுத்தியதால் நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சிங்கப்பூரில் உள்ள பிரைவேட் கம்பெனியில் வேலைக்கு சேர சம்மதித்தேன்..
என்னுடன் சேர்ந்து ரேகாவும், துர்காவும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர சம்மதித்தார்கள்.. சிங்கப்பூர் வேலைக்கு செலவீனங்கள் உள்ளதாக ஐஸ்வர்யா எங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வசூலித்து வந்தார்.. மொத்தமாக ரூ.24 லட்சம் வரை நாங்கள் பணம் கொடுத்துவிட்டோம்.. திடீரென்று துர்கா மட்டும் வேலை வேண்டாம் என்று சொல்லி விலகிவிட்டார்..
லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா
ஆனால், ஐஸ்வர்யா பெரிய அளவில் நாடகமாடி எங்களிடம் இருந்து ரூ.24 லட்சத்தை மோசடி செய்துவிட்டார்.. கடைசியில் அவரும் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை என்று தெரியவந்தது.. எங்களுக்கு போலியான பணி நியமன ஆணை கொடுத்து அவர் திட்டமிட்டு எங்களை ஏமாற்றி விட்டார்.. அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டார்..
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சுஷ்மிதாவின் புகாரின் பேரில் தரமணி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவை (28) போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.. அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர்..
ஐஸ்வர்யா கரூரைச் சேர்ந்தவராம்.. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது.. எம்.எஸ்சி. பட்டதாரியான ஐஸ்வர்யா, இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்..!!
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications