திருவண்ணாமலை போறீங்களா? கவனிங்க! தீப திருவிழாவுக்கு 4,089 சிறப்பு பேருந்துகள், இலவச மினி பஸ் இயக்கம்
சென்னை: திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, பல்வேறு நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 மினி பஸ்கள் கட்டணமில்லாமல் இயக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த ஆண்டு மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு சென்னை, பெங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வருகிற 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மதுரை அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக சிறப்பு பேருந்துகளுடன், கடைசி நேர கூட்ட நெரிசலை சமாளிக்க https:// www.tnstc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவும், அரசு போக்குவரத்து கழக செல்போன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டும் 14.12.2024 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் 12.12.2024 வியாழக்கிழமை முதல் 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4089 சிறப்பு பேருந்துகள் மூலம் 10110 நடைகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்குவதற்கும், அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கியது போல், தீபம் சிறப்பு பேருந்து இயக்கத்தின் போதும் 150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications