41% சர்வேயால் ஸ்டாலின் தரப்பு அப்செட்? தமிழக முதல்வர் விஜய்? திமுக அமைச்சரின் மைத்துனர் போட்ட குண்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு ட்விஸ்ட், நேற்று அரங்கேறியிருக்கிறது. உளவுத்துறையையும் தாண்டி, ஒரு ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியின் கையில் இருந்த அந்த ரகசிய ரிப்போர்ட் இப்போது ஆளுங்கட்சியின் தூக்கத்தை கலைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.. அதுவும் அந்த அதிகாரி திமுகவின் மிக முக்கியமான ஒரு அமைச்சரின் நெருங்கிய உறவினர் என்பதுதான் ஒட்டுமொத்த அறிவாலயத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள விஷயம். இதுகுறித்து எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

தமிழக அரசின் ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ரவி, அவரது ஐ.பி.எஸ். நண்பர்களை வைத்து எடுக்கப்பட்ட சர்வே ரிசல்ட்டுகளை நேற்று வெளியிட்டார்.

Vijay Stalin DMK Tamil Nadu Politics Election Survey Political News Breaking News

அதில் விஜய்யின் தவெக 41 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது என்று தெரிவித்திருந்தார். ரவியின் இந்த சர்வே ரிசல்ட் தான், எக்ஸிட் போல் ரிசல்ட்டை தாண்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் ரவி வெளியிட்ட சர்வே

ரவியின் இந்த ரிசல்ட், அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்ல முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் திமுகவின் அனைத்து மட்டங்களிலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. இதற்கு காரணம், திமுக குடும்பத்திற்கு மிக நெருக்கமானவரான ஐபிஎஸ் அதிகாரி ரவி, கடைசி நேரத்தில் இதனை வெளியிடலாமா? என்கிற கோபம் தான். எதற்கு அலட்டிக்கொள்ளாத முதல்வர் ஸ்டாலின் கூட, இந்த ரிசல்ட்டை ரசிக்கவில்லை என்கிறார்கள்.

இதுபற்றி விசாரித்தபோது, ஐபிஎஸ் அதிகாரி ரவியின் உடன்பிறந்த தங்கையின் கணவர் தான் அமைச்சர் தங்கம் தென்னரசு. அதாவது, தங்கம் தென்னரசு, ரவியின் சொந்த மைத்துனர்.. அதேபோல, தங்கம் தென்னரசுவின் சகோதரியும் திமுக எம்.பி.யுமான தமிழச்சி தங்கப்பாண்டியன் ரவியின் சொந்த அண்ணி. அதாவது ரவியின் சகோதரர் சந்திரசேகரரின் மனைவி தான் தமிழச்சி தங்கபாண்டியன்.

திமுக குடும்பத்துக்கு நெருககமான அமைச்சர்

இப்படி திமுக குடும்பத்துக்கு மிக நெருக்கமானவராக இருக்கும் ரவி, தவெகவுக்கு ஆதரவான ரிசல்ட்டை ரிலீஸ் செய்திருப்பதுதான் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.

தமிழக தேர்தல் களத்தை குறித்து ரவியும் அவரது நண்பர்களும் சேர்ந்து சர்வே எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், அதன் முடிவுகள் என்பது தவெகவுக்கு ஆதரவாக இருக்கும் போது அதனை ரிலீஸ் செய்யாமல் தவிர்த்திருக்க வேண்டும் அல்லது அதன் முடிவுகளை தங்கம் தென்னரசு மூலமாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பிறகு வெளியிட்டிருக்கலாம்.

அதை செய்யத் தவறியதுடன், வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் வெளியிட்டிருப்பது தான் சரியில்லை. அதுதான் திமுகவில் எல்லோருக்கும் ஆதங்கம் என்று திமுக தலைமை ரசிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் திமுகவின் சீனியர்கள்.

ரிலீஸ் செய்தது யார்

இதுகுறித்து, ரவிக்கு நெருக்கமான தரப்பில் நாம் விசாரித்தபோது, "திமுக குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர்தான் ரவி... திமுகவை பகைத்துக்கொள்ள அவரும் விரும்பவில்லை தான். அதனால், அவர் எடுத்த சர்வேக்களின் முடிவு திமுகவுக்கு எதிராக இருப்பதை உணர்ந்து அதனை வெளியிடாமல் இருந்திருக்க முடியும்.

ஆனால், தமிழக மக்களிடம் இருக்கும் உண்மை நிலை தான் என்பதை நேர்மையான வெளியிட நினைத்தே இதனை ரிலீஸ் செய்திருக்கிறார். ரவி மட்டும் இந்த சர்வேவை எடுக்கவில்லை. அவரைப் போல ஓய்வுபெற்ற அதிகாரிகளை கொண்ட ஒரு டீம் எடுத்திருக்கிறது.

ரவியின் நேர்மை

அப்படியிருக்க, ரவியின் தனிப்பட்ட விருப்பத்துக்காக ரிசல்ட்டை வெளியிடாமல் இருந்தால் டீம்மில் இருக்கும் மற்ற அதிகாரிகளிடம் ரவியின் நேர்மை கேள்விக்குறியாகாதா? அதனால்தான், உண்மையை வெளிப்படுத்துவது மட்டுமே டீமின் நோக்கம் என்பதைப் பதிவு செய்ய சர்வே முடிவுகளை வெளியிட்டார். இதில் திமுக தரப்பு அதிர்ச்சியடையவோ, ஆதங்கப்படவோ ஏதும் இல்லை" என்று விவரிக்கிறார்கள்.

எப்படியோ, திமுக குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு அதிகாரியே கலகத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதுதான் பொதுவான விவாதமாக இருக்கிறது. இவரது சர்வே படி தேர்தல் முடிவுகள் வருமா? அல்லது தவெகவுக்கு எதிராக வருமா? ரவியின் இந்தத் துணிச்சலான முடிவு அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தருமா அல்லது அரசியல் நெருக்கடிகளை உருவாக்குமா? என்பதெல்லாம் நாளை மறுநாள் தெரியப்போகிறது...!!!

- எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+