தமிழகத்தில் ஷாக்.. கொரோனா பாதிப்புக்கு சென்னையில் 42 வயது நபர் உயிரிழப்பு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 42 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்திவிட்டு சென்றது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் என எதற்கும் கட்டுப்படாத கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகே அடங்கியது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஜேஎன் 1 என்ற கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக JN1 வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படிப்படியாக அதிகரித்து வந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக குறைவான அளவிலே பதிவானது. சென்னையிலும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சென்னையில் பலியாகியுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 31ஆம் தேதி கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயது நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னதாக கொரோனா பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பயப்பட வேண்டிய சூழல் இல்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஜேஎன்1, ஜேஎன் .1 என்ற கொரோனா வைரஸ்கள் பரவி வருகிறது. இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் தான் கணக்கெடுத்து வருகிறார்கள். மற்ற நாடுகளில் கணக்கெடுப்பு பணியே மேற்கொள்ளவில்லை.
பாதிப்பு குறைவு என்பதால் விட்டுவிட்டனர். ஆனால் தமிழகத்தில் கணக்கெடுப்பு பணி நடந்து வருவதோடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது. அப்போது இருந்த பாதிப்பு இல்லை. இதனால் பயப்பட வேண்டிய தேவையில்லை. எந்தவிதத்திலும் பதற்றமில்லாத சூழல் நிலவுகிறது என்று கூறினார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications