சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை புத்தக கண்காட்சி காட்சி தொடங்கியது... 800 அரங்குகளில் புத்தகங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 800 அரங்குகளில் புத்தகங்கள் விற்ப்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன..

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 43-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது,

இப்புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பதிப்பகம், நூல் விற்பனை துறையில் சிறந்து விளங்குவோர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கீழடி- ஈரடி என்ற தலைப்பில் அரங்கம் ஒன்றும் தொல்லியல் துறை ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் முற்றம் என்ற நிகழ்சியில் 25 எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை அறிமுகம் செய்வர்.

மொத்தம் 800 அரங்குகளைக் கொண்ட இப்புத்தக கண்காட்சிக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 10 நாள்.. முக்கியமான ஒருவர் வருகிறார்.. தமிழக பாஜக தலைவர் யார்?.. முரளிதர ராவ் நாள் குறிப்புஇன்னும் 10 நாள்.. முக்கியமான ஒருவர் வருகிறார்.. தமிழக பாஜக தலைவர் யார்?.. முரளிதர ராவ் நாள் குறிப்பு

43-வது ஆண்டு

43-வது ஆண்டு

சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக பிரம்மாண்ட முறையில் புத்தகக் காட்சி நடத்தப்படுவது வழக்கம். 43 ஆண்டுகளாக இந்த புத்தக காட்சி நடைபெற்றாலும் கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த புத்தக் காட்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

750 அரங்குகள்

750 அரங்குகள்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் அமைக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சியில் 750-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. அதில் கிடைக்காத தலைப்புகளே இல்லை என்கிற வகையில் கோடிக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புத்தகக் காட்சி நடைபெறும் 10 நாட்களுக்கும் அதிரடி சலுகை விலையில் புத்தகங்கள் விற்கபடுகின்றன.

தொடக்க விழா

தொடக்க விழா

இன்று மாலை நடைபெறும் புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாஃபாய் பாண்டியராஜன், உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

21-ம் தேதி

21-ம் தேதி

43-வது சென்னை புத்தகக் காட்சியின் நிறைவு விழா வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறந்த அரங்குகள் உள்ளிட்ட புத்தக பதிப்பாளர்களுக்கு விருது வழங்குகிறார்.

English summary
43-th chennai book fair begins today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X