இன்று மட்டும் தமிழ்நாட்டில் 451 பேருக்கு கொரோனா உறுதி... 470 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 451 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 451 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது மாநிலம் முழுவதும் 4,206 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 49ஆவது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 8,46,026 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா காரணமாக இன்று ஏழு பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,432ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 470 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல தலைநகர் சென்னையில் இன்று 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்று 50,800 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 1,68,63,820 பேருக்கு கொரோனா கண்டறியும் சோதனை செய்யப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications