சென்னையில் 4-ஆவது நாளாக 4 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!.. சளைக்காத டிஸ்சார்ஜ்!
சென்னை: சென்னையில் 4640 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4519 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதாவது மருத்துவமனைக்கு வந்தவர்களை போல் 100 சதவீதம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு தற்போது பல்கி பெருகி வருகிறது.
இந்த நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 4640 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை
இன்று ஒரே நாளில் 4519 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். சென்னை இன்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதன் மூலம் சென்னையில் 4,629 பேர் இதுவரை பலியாகிவிட்டனர். இதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேர் பலியாகிவிட்டனர்.

ஈரோடு
அரியலூரில் இன்று ஒரே நாளில் 22 பேருக்கும் செங்கல்பட்டில் 1028 பேருக்கும் சென்னையில் 4640 பேருக்கும் கோவையில் 996 பேருக்கும் கடலூரில் 195 பேருக்கும் தருமபுரியில் 179 பேருக்கும், திண்டுக்கல்லில் 180 பேருக்கும் ஈரோட்டில் 414 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி
காஞ்சிபுரத்தில் 301 பேருக்கும் கன்னியாகுமரியில் 322 பேருக்கும் திருவள்ளூரில் 717 பேருக்கும் திருவண்ணாமலையில் 296 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இதுவரை அரியலூரில் 5427 பேருக்கும் செங்கல்பட்டில் 76275 பேருக்கும் கோவையில் 75293 பேருக்கும் சென்னையில் 318614 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

60 வயது
12 வயதுக்குட்பட்டவர்களில் 19884 ஆண்களுக்கும் 20439 பெண்களுக்கும் என 40323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 முதல் 60 வயதுடையோரில் 554895 ஆண்களும் 363189 பெண்களும் 60 வயதை கடந்தோரில் 97501 ஆண்களுக்கும் 57556 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications