சொந்த அக்காவையே.. பலாத்காரம் செய்த தம்பி.. அதுவும் பல வருடங்களாய்.. அள்ளிக் கொண்டு போன போலீஸ்
48 வயது அக்காவை பலாத்காரம் செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்
சென்னை: சொந்த அக்காவையே 20 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது.. இதை கட்டுப்படுத்த அரசும் காவல்துறையில் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும், அந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை.
வெளிநபர்களால் பெண்களுக்கு பாதுகாப்பின்மை உள்ள சூழலில், வீடுகளுக்குள்ளேயே வன்கொடுமைகள் நடந்து வருவது கலக்கத்தை தந்து வருகிறது. அப்படித்தான் சென்னை மயிலாப்பூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது..

கணவன்
கூடப்பிறந்த தம்பியே, அக்காவை மிரட்டி, பாலியல் வன்புணர்வு செய்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது... மயிலாப்பூரை சேர்ந்த அந்த சகோதரிக்கு 48 வயதாகிறது.. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.. ஆனால் திருமணமாகாதவர்.. இவருக்கு 40 வயதாகிறது.

மயிலாப்பூர்
அக்காவும் தம்பியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், சொந்த அக்கா என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அடிக்கடி வன்புணர்வு செய்து வந்துள்ளார்.. இது பல வருடமாகவே இப்படித்தான் நடந்து வந்துள்ளதாக தெரிகிறது... ஒரு கட்டத்தில் தம்பியின் தொல்லை அதிகரித்ததால், அந்த பெண் மயிலாப்பூர் மகளிர் ஸ்டேஷனில், தம்பியால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் அளித்து கதறி அழுதுள்ளார். அந்த புகாரில் பெண் கூறியுள்ளதாவது:

அண்ணாமலை
"கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 20 வருடங்களாக தாயுடன் தனியே வசித்து வருகிறேன். அதே வீட்டில் திருமணமாகாத தம்பி அண்ணாமலை (40), வசித்து வருகிறார்... அவர் அடிக்கடி மதுபோதையில், என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணை
அதன் அடிப்படையில் போலீசாரும் விசாரணை நடத்தியதில், சொந்த அக்காவுக்கு தம்பி பல வருடம் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது உண்மை உறுதியானது.. இதையடுத்து அந்த நபர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்... சொந்த அக்கா என்றும் பாராமல், 48 வயதாகிறது என்றும் பாராமல், பாலியல் வன்கொடுமையில் தம்பி ஈடுபட்டுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications