ரூ 481 கோடியில் வடபழனி பேருந்து முனையம்! என்னென்ன வசதிகள்?
சென்னை: சென்னை வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக வளாகத்துடன் கூடிய "வடபழனி பணிமனை வளர்ச்சித் திட்டம்" மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ 481 கோடியில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய வடபழனி பேருந்து பணிமனை வளர்ச்சி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரூ 481.3 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வடபழனி பேருந்து பணிமனை இடத்தில் உருவாக்கப்படும். இந்த வளர்ச்சி திட்டம், அதிக தேவை கொண்ட நகர்ப்புற மையத்தை உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு வசதி கொண்டதாக மாற்றுவதே நோக்கமாகும்.
12 மாடி
மொத்தம் 12 மாடி கொண்டது. தரை தளத்தில் நவீன பேருந்து நிலையம் அமைகிறது. அதில் 5 ஏறும் இடங்கள், 2 இறங்கும் இடங்கள், நுழைவு வாயில்கள் அமைக்கப்படுகிறது. மொத்த கட்டுமானப் பரப்பளவு 1,06,762 சதுர மீட்டர்கள் ஆகும்.
பைக்குகள்
இரு அடித்தளங்களில் 1,475-க்கும் மேற்பட்ட பைக்குகள், 214 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். முதல் தளத்திலிருந்து 10 ஆவது தளம் வரை அலுவலகங்களை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பயணிகள்
அதில் பெரு நிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள், அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைகிறது. பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு மையம், உணவகங்கள் 5ஆவது தளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
12 மாடிகள்
சிறிய விற்பனை நிலையங்களை கிரவுண்ட் ஃப்ளோரில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாடியில் பசுமையான தோட்டம், சூரிய ஒளி பேனல்கள் அமைக்கப்படுகின்றன. வடபழனி சென்னை மாநகரின் பரபரப்பான 32 பணிமனைகளில் ஒன்றாகும்.
12 ஆவது மாடியில் என்ன
11 மற்றும் 12-வது தளங்கள் குறிப்பாக AVGC - Animation, Visual Effects, Gaming, and Comics துறைக்காக நியமிக்கப்பட்டுள்ளன. பிராட்வே பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக பல அடுக்குகளாக கட்டப்பட இருக்கும் நிலையில், தற்போது வடபழனியிலும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ 823 கோடி
சென்னையில் பழமையான பிராட்வே பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 823 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
9 மாடிகள்
இந்த புனரமைப்பு பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்கள் முழுவதும் இடிக்கப்படுகின்றன. அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
பிராட்வேயில் 10 மாடிகள்
அது போல் பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படுகிறது. அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரயில்வே, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன. ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications