சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் புதிதாக 489 பேருக்கு கொரோனா... தொடர்ந்து குறையும் பாதிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் 158 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: கொரோனாவிலிருந்து மீண்ட 506 பேர்!

    கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.

    489 new Covid cases, 4 deaths in Tamil Nadu

    சென்னையில் இன்று 158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 83-வது நாளாக 500-க்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. கொரோனாவுக்கு 4,446 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 8,40,849 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 8,24, 024 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் மேலும் 506 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி... விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது பைசர்இந்தியாவில் கொரோனா தடுப்பூசி... விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது பைசர்

    இன்று 52,487 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,59,69,220 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 52,656 மாதிரி சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,62,81,457 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் 158 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொடர்ந்து குறைந்து வருகிறது.

    English summary
    In Tamil Nadu, 489 new cases of corona have been reported today. 158 people have been affected in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X