சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை! ஏஜென்சியிடம் போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 49 பேர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பது அவரது உறவினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் நேற்று காலை கோஷி ஆற்றில் காலை 9 மணிக்கு திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. திபெத் பகுதியில் இருந்து வந்த வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர் மின் திட்டங்கள் கடும் சேதமடைந்தன.

nepal flash floods

ராசுவா பகுதியில் பனி சூழ்ந்த ஏரி உருகி மொத்தமாக ஏரி வெளியேறிதால் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் 105 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. நேபாளத்திற்கு மானசரோவர் யாத்திரை சென்ற சென்னையைச் சேர்ந்த 49 பேர் குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தீனதயால், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியிலிருந்து விக்ரமன், மஞ்சுளா, குரோம்பேட்டையில் இருந்து 6 பேர், காஞ்சிபுரத்தில் இருந்து 6 பேர் என 49 பேர் நேபாளம் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருக்கிறார்கள்.

நாமக்கல்லில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேரும், நேபாளம் சென்று காணாமல் போயிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவர்கள் சென்னையிலிருந்து நேபாளம் சென்று, அங்கு பெருவெள்ளச் சம்பவத்தில் காணாமல் போயிருப்பது அவர்களது உறவினர்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஆன்மீக சுற்றுலா ஏஜென்சி மூலம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 49 பேர் நேபாளத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்கள் எல்லாம் வீடு திரும்ப வேண்டிய நிலையில் விமான நிலையத்திற்கு அருகே உள்ள குடியுரிமை அலுவலகம் சென்றதாக அவர்களிடமிருந்து கடைசியாக தகவல் வந்துள்ளது.

அதன் பிறகு அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த ஏஜென்சியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் நேபாளம் சென்றவர்கள் விவரங்கள், அவர்களை கடைசியாக தொடர்பு கொண்டது எப்போது? என்ற விவரங்களை கேட்டு வருகிறார்கள்.

சத்தியநாராயணன் மார்வெல்- குரோம்பேட்டை

தீனதயாள் தசரதராமன் - பெரம்பூர்

விக்ரமன் குப்புசாமி- ஈக்காட்டுத்தாங்கல்

மஞ்சுளா விக்ரமன் - ஈக்காட்டுத்தாங்கல்

வேழவந்தான் பாண்டுரங்கன்- குரோம்பேட்டை

ராஜலட்சுமி வேழவந்தான்- குரோம்பேட்டை

அமுதகுமார்- குரோம்பேட்டை

கிஷோர் குமார் - குரோம்பேட்டை

குமரகுருபரன் - ஆழ்வார்பேட்டை

ஜெயலட்சுமி குமரகுருபரன்- ஆழ்வார்பேட்டை

விஜயலட்சுமி முருகேசன்- குரோம்பேட்டை

விஜயலட்சுமி முருகேசன்- குரோம்பேட்டை

செந்தில் பழனி- சென்னை

ராஜாராம் வெங்கடேசன்- எஸ்பி கோயில்

சந்திரன் குப்புசாமி- காஞ்சிபுரம்

அருட்செல்வன் கோவிந்தராஜன்- காஞ்சிபுரம்

லதா பானுமதி குருசாமி- காஞ்சிபுரம்

மீனாட்சி நந்தகுமார்- காஞ்சிபுரம்

சரஸ்வதி ராஜகோபால்- காஞ்சிபுரம்

கோபால் அருணாச்சலம்- காஞ்சிபுரம்

சரஸ்வதி ராஜகோபால்- காஞ்சிபுரம்

நிர்மலா செல்வன்- திருவண்ணாமலை

மாரி மீனாள் அய்யாதுரை- மதுரை

தமிழ்செல்வன் சுப்பிரமணியன் - விருதுநகர்

செல்வம் நடராஜன்

சித்ரதேவி நாகராஜ்- தேனி

சரஸ்வதி நடராஜன்

அருள்மணி பழனிவேல்- நாமக்கல்

பழனிவேல் பழனியப்பன்- நாமக்கல்

மாராயி ராமசாமி-

அசோகன் ராமசாமி கவுண்டர்- நாமக்கல்

தமிழரசி அசோகன்

கிருஷ்ணவேனி நடராஜன்- ஈரோடு

நடராஜன் மோகனா கவுண்டர்- ஈரோடு

கற்பகம் பெரியசாமி- கரூர்

தனலட்சுமி நல்லுசாமி- கரூர்

அன்பரசு வெங்கடாசலம்- கரூர்

கனகசுந்தராம்பாள் கணேசன்- திருச்சி

விமலா ரவி- திருச்சி

சுந்தரராஜன் ரவி- சேலம்

மணிகண்டன் - சேலம்

நாகலட்சுமி- சேலம்

சசிரேகா நாகராஜன்- சேலம்

புனிதா சந்திரசேகர்- கோவை

ராஜ் தீர்த் - கோவை

சிவந்தி- கோவை

காயத்ரிதேவி- கோவை

சாருலதா- கோவை

சுரேஷ் வெங்கடாசலம்- கோவை

தங்கலட்சுமி- கோவை

இந்த 49 பேருடன் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளரின் மகனும் சென்றதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+