சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த 5 அறிவிப்புகள்.. எதிர்பாராத அஸ்திரத்தை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவின் வியூகம்.. பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட 5 அறிவிப்புகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இந்த 5 அறிவிப்புகள் பெரிய கேம் சேஞ்சராக இருக்க போகிறது.

Recommended Video

    #TNElection2021 திருச்சி: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000: 7 உறுதிமொழிகளை வெளியிட்டார் மு.க. ஸ்டாலின்!

    'விடியலுக்கான முழக்கம்' என்ற தலைப்பில் திருச்சியில் நேற்று திமுக சார்பில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மூத்த உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சிக்னல்.. அவசரமாக கிளம்பி போன சுதீஷ்.. இரவே முதல்வரை சந்தித்து மீட்டிங்.. 1 மணி நேரம் என்ன நடந்தது? சிக்னல்.. அவசரமாக கிளம்பி போன சுதீஷ்.. இரவே முதல்வரை சந்தித்து மீட்டிங்.. 1 மணி நேரம் என்ன நடந்தது?

    கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வரை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திமுக வரலாற்றில் நடத்தப்பட்ட மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. பக்கா திட்டத்தோடு, முறையான ஏற்பாடுகளோடு இந்த மாநாடு நடைபெற்று முடிந்தது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    10 ஆண்டு இலட்சிய பிரகடனம் என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை இந்த கூட்டத்தில் வெளியிட்டார். அதேபோல் பொருளாதாரம், சமூக நீதி, கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை, நீர்வளம், ஊரக உட்கட்டமைப்பு ஆகிய 7 விஷயங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் 7 துறைகள் 7 உறுதிமொழிகள் என்ற அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

     உரிமை தொகை

    உரிமை தொகை

    இதில் ஸ்டாலின் வெளியிட்ட 5 அறிவிப்புகள் அதிக கவனம் பெற்றுள்ளது. முதல் முக்கியமான அறிவிப்பு பெண்களுக்கான உதவித்தொகை ஆகும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு உதவித்தொகை என்று கூட பெயர் வைக்காமல் உரிமைத் தொகை என்று பெயர் வைத்தது வரவேற்பை பெற்றுள்ளது.

    கழிவு

    கழிவு


    இன்னொரு பக்கம் மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் பணிகளை நீக்குவோம். இதில் நவீன கருவிகளை பயன்படுத்துவோம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழக மக்களின் இந்த பல நாள் கோரிக்கையை வாக்குறுதியாக ஸ்டாலின் வெளியிட்டார். மூன்றாவதாக கல்வி சுகாதாரத்துக்குச் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்படும். இந்த நிதி மூன்று மடங்கு உயர்த்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

    அதிகம்

    அதிகம்


    இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் பெரிய பங்களிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மூன்று மடங்கு நிதி உயர்வு என்பது பெரியமாற்றமாக இருக்கும் என்கிறார்கள். நான்காவதாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 10 வருடத்தில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க போவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    ஸ்டாலின் அறிவிப்பு

    ஸ்டாலின் அறிவிப்பு

    இது போக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை தாண்டும். கடனில் இருந்து தமிழகம் மீட்கப்படும். ரூ 35 லட்சம் கோடியைத் தாண்டும் வகையில் பொருளாதார வளர்ச்சியை கொண்டு செல்வோம். இதற்கான திட்டங்களை அறிவிப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று திமுக ஒவ்வொரு துறைக்கும் திட்டமிட்டு அறிவிப்புகளை வெளியிட்டது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    அதில் இந்த 5 அறிவிப்புகளும் நிறைவேற்ற வாய்ப்பு இருக்க கூடிய அறிவிப்புகள் ஆகும். அதேபோல் இந்த அறிவிப்புகள் தமிழகத்தின் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ள அறிவிப்புகள். தேர்தல் நேரத்தில் இதை பெரிய கேம் சேஞ்சராக திமுக பார்க்கிறது. இந்த அறிவிப்புகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடம் கொண்டு செல்ல திமுக திட்டமிட்டுள்ளது.

    English summary
    5 Big announcements, DMK hopes to lure the votes after the Massive Trichy Rally yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X