பாம்புக்கு வாய் வழியே செயற்கை சுவாசம்.. கோழிப்பண்ணையில் சிபிஆர் தந்த ஹீரோ.. டக்னு எழுந்த 5 அடி நீளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வனவிலங்கு மீட்பு வீரர் ஒருவர், வலைக்குள் சிக்கிய பாம்பை மீட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அந்த இளைஞரின் பெயர் லிஜோ கச்சேரி.. இவருக்குதான் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையேயும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அத்துடன், பொதுமக்களுக்கு வனவாழ் நிபுணர்கள் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். என்ன நடந்தது கேரளாவில்?

கேரளாவில் மந்தமங்கலம் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது.. இங்கு ராஜீவ் என்பவர் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் கோழிப்பண்ணை ஒன்றை வைத்துள்ளார்.. இங்கு ஏராளமான கோழிகள் பராமரித்த வளர்க்கப்பட்டு வருகின்றன.. இந்த் கோழிகளை பாதுகாப்பதற்காகவும், வேறு எங்கும் சென்றவிடக்கூடும் என்பதற்காகவும், வலை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

Snake artificial respiration CPR

கோழிப்பண்ணை கோழிகள்

கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு, அந்த வழியாக ஒரு பாம்பு வந்துள்ளது. கோழிப்பண்ணையை பார்த்ததுமே, அதற்குள் நுழைய முயன்றுள்ளது.. ஆனால், எதிர்பாராத விதமாக கட்டப்படிருந்த வலைக்குள் பாம்பு சிக்கி கொண்டது.. இதனால் அந்த பாம்புவால் வெளியேற முடியவில்லை.. இரவெல்லாம் வலையில் சிக்கியபடியே தவித்தது.

மறுநாள் அந்த வீட்டின் உரிமையாளர் கோழிப்பண்ணையை பார்வையிட வந்தபோதுதான், வலையில், பாம்பு ஒன்று அசைவற்றுக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. உடனே வனத்துறையினருக்கு தகவல் தந்ததன் அடிப்படையில், அவர்களும் விரைந்து வந்தனர்.. வலையில் மாட்டிக் கொண்டிருந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை மீட்டனர்..

பாம்பு அசையவே இல்லை

ஆனாலும், பாம்பின் உடலில் பெரிதாக எந்த அசைவுகளும் இல்லை.. ஆனால், அது உயிருடன் இருப்பது மட்டும் சிறுசிறு அசைவுகளின் மூலம் தெரியவந்தது வந்தது.. இதனால் வனத்துறையினர், பாம்பு பிடிக்கும் லிஜோ கச்சேரி என்பவரை அழைத்து வந்தனர்..

லிஜோ அங்கு வந்ததுமே, பாம்புக்கு மூச்சு விட முடியவில்லை என்பதை கண்டுபிடித்தார்.. உடனடியாக பாம்பின் வாய் வழியாக செயற்கை சுவாசம் அளித்தார். மேலும் பாம்பின் மூளைக்கு ரத்தம் செல்ல ஏதுவாக, அதன் வாலைப் பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு, மசாஜ் செய்தார். உடனே பாம்பு விருட்டென்று நிமிர்ந்தது..

சிபிஆர் - வேண்டுகோள்

இதைப்பார்த்த லிஜோ, "நீ உயிர் பிழைச்சுட்டே, இனிமே போகலாம் பையா' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.. சிறிது நேரத்திலேயே அந்த பாம்பு, மீண்டும் பலம் பெற்று மெதுவாக ஊர்ந்து அங்கிருந்து சென்றுவிட்டது.

லிஜோ பாம்புக்கு செயற்கை சுவாசம் தந்து பாம்பை மீட்ட சம்பவத்தை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டுவிட்டனர்.. "நீ உயிர் பிழைச்சுட்டே, இனிமே போகலாம் பையா' என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை இணையவாசிகள் ஆர்வதுடன் கண்டுகளித்தும், ஷேர் செய்தும் வருகிறார்கள்.

கேரளாவில் வனவிலங்குகளுக்கு சிபிஆர் எனப்படும் வாய் வழியே மூச்சு காற்றை செலுத்தி, உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதில் லிஜோ கச்சேரி மிகவும் பிரபலம் வாய்ந்தவராம்.. சமீபத்தில்கூட, மான் குட்டி ஒன்றிற்கு இதுபோன்ற ஒரு சிகிச்சையை அளித்து, அது செய்திகளில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டவர்தான் இந்த லிஜோ.. இப்போது பாம்புவை காப்பாற்றியதால், லிஜோவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

இதனிடையே, பாம்புகளுக்கு இதுபோன்ற சி.பி.ஆர். சிகிச்சையை அளிப்பதற்கு, மக்கள் முன் வரவேண்டாம் என வனவாழ் நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. தொழில்முறை அறிவு கொண்ட நிபுணர்களே இதில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+