இந்த 5 பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டால்.. உடனே வருமான வரித்துறை நோட்டீஸ் தேடி வரும்.. கவனம்!
சென்னை: வருமான வரித்துறை நோட்டீஸ் எந்த மாதிரியான பரிவர்த்தனைகளுக்கு அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் - ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு வருடமும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம், நேரம் கொடுக்கப்படும். இந்த வருடம் ஜூலை 31 வருமான வரி செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வருடம் இதில் 1 கோடி என்ற எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டு உள்ளது. அதாவது 6.91 கோடிக்கும் அதிகமான ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் வருமான வரித்துறை நோட்டீஸ் எந்த மாதிரியான பரிவர்த்தனைகளுக்கு அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை லிஸ்ட் வெளியிட்டுள்ளது.
1.வங்கி FD களில் அதிக மதிப்புள்ள வைப்புகளை செய்தல்: வங்கி எஃப்டியில் ரொக்க வைப்புத்தொகை ஒரு டிரான்ஸாக்சனில் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட தனிநபர் டெபாசிட்கள் இருந்தால் வங்கிகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கூடுதல் முதலீடுகளை செய்தால் நோட்டீஸ் கிடைக்கும்.
2. சேமிப்பு வங்கி கணக்குகளில் பண வைப்பு: ஒரே டிரான்சாக்ஸனில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யக்கூடிய தொகை ரூ. 10 லட்சம். வருமான வரித்துறை, ரூ.100000க்கு மேல் முதலீடு செய்யும் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்பும். அதேபோல் வங்கிக் கணக்கிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக எடுத்தாலோ, போட்டாலோ அதற்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் நோட்டீஸ் வழங்கப்படும்.
3.கிரெடிட் கார்டு பில்களை செலுத்துதல்: கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கு ரூ.1 லட்சம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மேற்பட்டவை கண்காணிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு நிதியாண்டில் 10 லட்சங்கள் அல்லது அதற்கும் மேல் கிரெடிட் கார்டு பில்களை செட்டில் செய்தால் அதற்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் அதற்கும் நோட்டிஸ் அளிக்கப்படும். உங்கள் கிரெடிட் கார்டு தகவல் உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வரி அதிகாரிகள் உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க முடியும். உங்கள் கிரெடிட் கார்டு தகவலுடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் செலவழிக்கும் தொகையை அரசு உடனடியாகக் கண்காணிக்க முடியும். ITR (வருமான வரி அறிக்கை) சமர்ப்பிக்கும் போது இந்த பரிவர்த்தனை விவரங்களையும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
4. மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பத்திரங்கள் அல்லது கடனீட்டுப் பத்திரங்கள்: இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், இந்த முதலீடுகளில் ரொக்கப் பரிவர்த்தனைகள் 10 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நிதியாண்டில் 10 லட்சம் மட்டுமே ஆவணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும். வரி செலுத்துவோரின் அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு கணக்கு காட்டவில்லை என்றால் நோட்டீஸ் வழங்கப்படும்.
5. அசையாச் சொத்தை வாங்குதல் அல்லது விற்றல்: நீங்கள் ஒரு சொத்தை ரூ.30 லட்சத்திற்கு வாங்கினால், நீங்கள் வரி அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வருவீர்கள். 30 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்கள் இதற்கு கணக்கு காட்ட வேண்டும். சொத்து பதிவாளர், அசையாச் சொத்தின் மீதான முதலீடு அல்லது விற்பனைக்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் வருமான வரி நோட்டீஸ் வழங்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications