சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்றிலிருந்து அடுத்த இன்னிங்ஸ்.. எல்லோரையும் வர சொன்ன ஸ்டாலின்.. ரெடியான உதயநிதி! ஆஹா.. பிளான் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் இன்று பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்குவது பற்றி மட்டுமின்றி வேறு சில முக்கியமான விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட உள்ளன.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபின் நடக்கும் முதல் கூட்டம் ஆகும் இது.

புதிதாக பதவி ஏற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இலாக்கா மாற்றப்பட்ட அமைச்சர்கள் 10 பேர் உட்பட எல்லோருக்கும் இதற்கான அழைப்பு சென்றுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டம் பின்வரும் காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.

என்னால் எனது தங்கையும் படிக்க முடியாமல் போனது! சுவாரஸ்யமான பிளாஷ்பேக் கூறிய ஸ்டாலின்! என்னால் எனது தங்கையும் படிக்க முடியாமல் போனது! சுவாரஸ்யமான பிளாஷ்பேக் கூறிய ஸ்டாலின்!

1 விஷயம்

1 விஷயம்

அதன்படி இந்த அமைச்சரவை கூட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதை தாண்டி, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள். தங்கள் மாவட்டத்திற்கு கீழ் உள்ள எம்பி தொகுதிகளில் அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. முக்கியமாக வார்டுகள் மாற்றம், உள்ளூர் அளவில் பணிகளை செய்வது, தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குவது என்பது பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அமைச்சர்களின் மாவட்டங்களில் நாடாளுமன்ற தொகுதிகளில் தோல்வி அடையவே கூடாது என்ற டாஸ்க் இன்று கொடுக்கப்பட உள்ளது.

2 விஷயம்

2 விஷயம்

இரண்டாவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி ஆலோசனை செய்வார்கள். அவருக்கு வழிகாட்டுவது. சீனியர்கள் அமைச்சர்கள் சிலர் அவருக்கு ஆலோசனை வழங்குவது. அவரின் சிறப்பு செயலாக்க திட்ட துறை மற்ற துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதை எப்படி செய்வது. உதயநிதி இந்த துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் இன்று ஆலோசனை செய்யப்பட உள்ளன.

3 விஷயம்

3 விஷயம்

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது துறை ரீதியான செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் இலக்காகக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதே நேரத்தில் மற்ற துறைகளுக்கும் வேறு செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாகவும் அமைச்சர்களுக்கு ஏற்ற செயலாளர்களை நியமனம் செய்வது பற்றியும் ஆலோசனை செய்ய உள்ளனர்.

 4 விஷயம்

4 விஷயம்

2023ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனவரி 2ம் வாரத்திற்கு பின் இந்த கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் பெரும்பாலான சமயங்களில் பொங்கலுக்கு முன்பாக கூட்டத்தொடர் நடக்கும். ஆனால் இந்த முறை பொங்கலுக்கு பின்பாக கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டசபை கூட்டத்தொடர் தொடர்பாகவும் நாளை ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 விஷயம்

5 விஷயம்

பல அமைச்சர்களுக்கு புதிய இலாக்கா வழங்கப்பட்டு உள்ளது. இது கிட்டத்தட்ட புதிய இன்னிங்ஸ் போல முக்கியமானது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களிடம் அவர்களின் புதிய துறை குறித்து ஆலோசனை செய்யப்படும். அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள புதிய இலாக்கா குறித்து ஆலோசனை செய்யப்படும். கூடுதல் இலாக்கா வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் அதை பற்றி பேசப்படும். அதேபோல் துறை மாற்றப்பட்ட அமைச்சர்களிடம் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

English summary
5 Important things: What will CM Stalin to talk in the minister in the cabinet meeting today?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X