பயங்கர மோதல்.. சென்னையில் காவலரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற போலீசை அவர்கள் கட்டையால் சரமாரியாக தாக்கி விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை , திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நிறைய பேர் வேலை செய்து வருகின்றனர்.

5 North Indian workers arrested for attack police at Ambattur Industrial Estate in Chennai

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையிலும் வடமாநில தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். அந்த தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

அப்போது 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஒன்றாக கூடினர். அதில் நிறைய பேர் மதுபானம் குடித்திருந்தனர். போதையில் திடீரென வடமாநில தொழிலாளர்கள் இருபிரிவாக பிரிந்து மோதிக்கொண்டனர். அப்போது இருதரப்பும் ஒருவரையொரும் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் நேரில் சென்று மோதலை விலக்கி அவர்களை விரட்ட முயன்றனர். அந்த சமயத்தில் வட மாநில தொழிலாளர்கள் போலீஸ்காரர் ரகுபதியை சரமாரியாக தாக்கினர். கல் மற்றும் கட்டையை வைத்து ரகுபதியை அவர்கள் தாக்கினர். மேலும் அவரது டூவீலரையும் அடித்து நொறுக்கினர்.

இதில் ரகுபதி காயமடைந்தார். இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு சென்ற நிலையில் வடமாநில தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். படுகாயமடைந்த போலீஸ்காரர் ரகுபதி மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதோடு சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரகுபதியை தாக்கியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். ரகுபதி புகாரில் போலீசார் வழக்கும் பதிவு செய்தனர். இந்நிலையில் தான்
ரகுபதி மீது தாக்குதல் நடத்தியதாக 5 வடமாநில தொழிலாளர்களை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+