மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் அசத்தல்! 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது- தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் 5 பேர் காந்தியடிகள் காவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது பெறும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவோருக்கு இந்த விருது என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 5 பேர் காந்தியடிகள் காவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான காந்தியடிகள் காவல் விருது பெறுவோரின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி விழுப்புரம் எஸ்பி சசாங்சாய், தென்சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி காசி விஸ்வநாதன், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முனியசாமி ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
அதேபோல் மதுரை மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்ஐ பாண்டியன், ராணிப்பேட்டை மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ரங்கராஜன் ஆகியோருக்கு இந்த விருது என்பது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வான இந்த 5 பேருக்கும் 2024 குடியரசு தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் காந்தியடிகள் காவல் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். இந்த விருதுடன் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications