அட.. நடுக்கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்த "இலங்கை மீனவர்கள்," அதிரடியாக கைது செய்த இந்திய கடற்படை
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களின் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள தீரா பிரச்சனைகளில் ஒன்றாக மீனவர் பிரச்சனை உள்ளது. நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் ஒருவித அச்சத்துடனே தான் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த பிரச்சனை நீண்ட காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் தீர்வு காணப்படவில்லை. இலங்கை கடற்படையினரின் எல்லை மீறிய செயலால் தமிழக மீனவர்கள் பலலட்சம் மதிப்பிலான வலைகள், மீன்களை இழந்து வருகின்றனர். இதற்கிடைடையே அவ்வப்போது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழக மீனவர்களை தாக்குவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு மாறாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்து ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications