ஸ்கூலுக்கு போகமாட்டேன் என அடம்பிடித்த 5 வயது சிறுமி.. பெற்றோருக்கு சந்தேகம்- சிக்கிய ‘கொடூர’ பியூன்!
சென்னை : சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி அந்தச் சிறுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் போயுள்ளது.
இதையடுத்து உடல்நிலை சீரான பின்பும் அந்தச் சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தி உள்ளனர். ஆனால், அந்த சிறுமி அந்தப் பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனக் கூறி பயந்து அழுதுள்ளார்.

இதனால், ஏன் பள்ளிக்கு போகமாட்டேன் என அடம்பிடிக்கிறாய் என அந்தச் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் பியூனாக வேலை பார்க்கும் ராஜ் (38) என்பவர் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினரிடம் பெற்றோர் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் சரிவர பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து அந்தச் சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த பியூனான ராஜை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications