உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி.. க்யூட் ஓவியத்தோடு 5ம் வகுப்பு மாணவி கடிதம்.. தலைமை நீதிபதி நெகிழ்ச்சி!
சென்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவிற்கு கேரளாவை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி ஒருவர் எழுதிய கடிதம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் தற்போது ஓய்ந்துள்ளது. ஏப்ரலில் இருந்து மே மாதம் வரை இரண்டாம் அலை மிக மோசமாக தாக்கிய நிலையில், தற்போது கேஸ்கள் குறைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றம் மிகவும் சிறப்பாக கவனம் செலுத்தியது.

ஆக்சிஜன் ஒதுக்கீடு தொடங்கி வேக்சின் கொள்கை வரை பல விஷயங்களில் உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவுகள்தான் மத்திய அரசை துரிதமாக இயங்க வைத்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவிற்கு இதற்காக நன்றி தெரிவித்த கேரளாவை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி லிட்வினா ஜோசப் கடிதம் எழுதி உள்ளார்.
திருச்சூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவி லிட்வினா ஜோசப் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா தடுப்பு பணிகளிலும், மக்களின் உயிர்களை காப்பதிலும் உச்ச நீதிமன்றத்தின் பங்கை செய்தித்தாள்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். ஆக்சிஜன் ஒதுக்கீடு விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு மக்களின் உயிரை உச்ச நீதிமன்றம் காப்பாற்றியது எனக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
Image Source : www.barandbench.com
இந்தியாவில் கொரோனா பரவலை குறைப்பதிலும், மரணங்களை தடுப்பதிலும் உச்ச நீதிமன்றத்தின் பங்கை உணர்கிறேன். முக்கியமாக டெல்லியில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி நீதிபதிகளே.. நான் மிகவும் பெருமையாகவும், மகிழ்வாகவும் உணர்கிறேன், என்று லிட்வினா ஜோசப் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கடித்ததோடு லிட்வினா ஜோசப் அழகான நீதிபதி ஓவியம் ஒன்றையும் வரைந்து அனுப்பி இருந்தார். இந்த நிலையில் தலைமை நீதிபதி என்வி ரமணா இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், இந்த வயதில், தினசரி செய்திகளையும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் தொடர்ந்து பின்பற்றுவது எனக்கு வியப்பு அளிக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களின் நல்வாழ்க்கை குறித்து உன்னுடைய கவலை வியப்பளிக்கிறது, நீ நல்ல அறிவார்ந்த குடிமகளாக வளர்ந்து இந்த நாட்டிற்கு பங்களிப்பாய் என்று நம்புகிறேன், என்று தலைமை நீதிபதி பதில் அளித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications