₹ 50,00,00,000 ரூபாயா.. திமுக அரசை பார்த்தீங்களா.. வேற லெவல்.. சபாஷ் விசிக.. "மாறுதே மாமல்லபுரம்"..!
சென்னை: புது பஸ் ஸ்டாண்டு ஒன்று விரைவில் வரப்போகுது.. எங்கே தெரியுதா.. அதற்கான அறிவிப்பைதான், திமுக அமைச்சர் சேகர்பாபு அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.
சுற்றுலா தலமான மாமல்லபுரம் பஸ் நிலையமானது, தலசயன பெருமாள் கோயில் எதிரே திறந்தவெளியில், குறுகிய இடத்தில் பயணிகளுக்கு தேவையான நிழற்குடை, கழிப்பறை, குடிநீர், உடமைகள் பாதுகாப்பு அறை போன்ற வசதிகள் என இப்படி எதுவுமே இல்லாமல் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இத்தனைக்கும், உலகப்பாரம்பரிய நகரமாக "யுனஸ்கோ" அங்கிகாரம், சிற்ப புவிசார் நகரம், சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி நடந்துள்ள மாமல்லபுரத்தில் போதிய வசதி இல்லாமல் பஸ் நிலையம் இருந்து வருவது கவலையை தந்து கொண்டிருக்கிறது.
புது பஸ் ஸ்டாண்டு: மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு முடங்கியது... பிறகு, 2010ம் ஆண்டு மறுபடியும் இதற்கான முயற்சி நடந்தது.. ஆனால், அதுவும் நடைபெறவில்லை. பிறகு, கருகாத்தம்மன் கோயில் வடபுறம் அரசுக்கு சொந்தமான 6.80 ஏக்கர் நிலத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட உறுதி செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது... ஆனால், கொரோனா லாக்டவுன், தேர்தல், திட்ட மதிப்பீட்டில் குளறுபடி போன்ற காரணங்களினால், அதுவும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
மண் பரிசோதனை: 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை... இதற்கு பிறகு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.. அதில் பூங்கா, தங்கும் அறை, டிஜிட்டல் வரைபட விளக்க போர்டு, சி.சி.டி.வி பாதுகாப்பு, அதை கண்காணிக்க காவல்துறை கட்டுப்பாட்டு அறை, தானியங்கி நடைமேடை, விசாலமான பார்க்கிங் போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான கள ஆய்வு மற்றும் புதிய வரைபட ஆலோசனையும் கடந்த வருடமே நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தா.மோ.அன்பரசன், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா, கலெக்டர் ராகுல்நாத், எம்.பி செல்வம், எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.. இதற்கான பணிகள் அப்போதே துவங்கி, 15 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருந்தார்.. ஆனால், ஒருவருடமாகியும் அது என்ன ஆனது என்று தெரியவில்லை..

பஸ் ஸ்டாண்டு: எனினும், இந்த குறுகிய திறந்த வெளி பகுதியே பஸ் நிலையமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.. சென்னை மாநகர், அரசு, தனியார் பஸ்கள் நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன... இதனால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி வருகிறது.. அதனால்தான், மாமல்லபுரம் புறநகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக அதிநவீன பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் விடப்பட்டபடியே உள்ளது..
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சட்டசபையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மானிய கோரிக்கையில், திருப்போரூர் விடுதலை சிறுத்தை கட்சி எம்எல்ஏ பாலாஜி, இந்த திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த, அமைச்சர் சேகர்பாபு, "மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்" என அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications