வியந்த லீடர்ஸ்.. பாஜக இப்படியெல்லாம் யோசிக்குதே.. 50/50 சாத்தியமா? 2 பிரம்மாஸ்திரம் எடுக்குது.. பலே
சென்னை: 2 விதமான வியூகங்களை முன்னெடுத்து பாஜக, கச்சிதமாக காய்களை நகர்த்தி வருகிறது.. என்ன நடக்கிறது தமிழக பாஜகவில்?
இந்த முறை ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. அந்தவகையில், 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்கையும் அறிவித்துள்ளனர்.. இதற்கான சுற்றுப்பயணங்களையும் தேசிய தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
பிரச்சாரம்: மற்றொருபக்கம் பாஜகவின் வேட்பாளர்கள் மிக கவனமுடன் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்... 2 நாட்களுக்கு முன்புகூட பாஜகவின் முதல் வேட்பாளர் வெளியானது. அதில் 195 பேர் இடம் பெற்றுள்ளனர்... பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இராணி, சபாநாயகர் ஓம்பிர்லா உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால், அந்த லிஸ்ட்டில் தமிழகம் இடம்பெறவில்லை. பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை நடைபெற்ற உள்ளதால், 2வது லிஸ்ட்டில் இடம்பெறும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. அந்தவகையில், வெற்றி வாய்ப்புள்ள பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பாஜக பிரமுகர்களுக்கு இந்த 2வது லிஸ்ட்டில் வாய்ப்புகள் தரப்படும் என்கிறார்கள்.
டெல்லி லிஸ்ட்: தமிழகத்தை பொறுத்தவரை, எல்லா தொகுதிக்கும் உத்தேச வேட்பாளர்கள் பெயர்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.. இந்த லிஸ்ட்டும் நாளை டெல்லியில் ஒப்படைக்கப்பட உள்ளது..
அதுமட்டுமல்ல, 39 தொகுதிகளில் குறிப்பிட்ட 12 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்த பாஜக மேலிட தலைவர்கள் திட்டமிட்டிருப்பதால், அந்த தொகுதிகளில் வேட்பாளர்களாக யார்-யாரை தேர்வு செய்யலாம் என்பது நாளை முடிவாகும் என்கிறார்கள்.. அந்தவகையில் நாளை தேர்வாகும் 2வது பாஜக வேட்பாளர் லிஸ்ட்டில், தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பற்றின தகவல்களும் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரிபாதி வாய்ப்பு: ஆனால், தென்னிந்தியாவைவிட வடமாநிலங்களில் மட்டுமே இப்போதைக்கு தேர்தல் பணிகளில் பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறதாம்.. அதற்கேற்றவாறு, வட இந்தியாவை மையப்படுத்தியே முதல்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டும் வெளியாகியிருந்தது.. ஆனால், பாஜக மேலிடம் 400 சீட்களை டார்கெட் செய்திருப்பதால், தென்னிந்தியா + வட இந்தியா என பிரித்து, 50/50 என்ற வீதத்தில்தான் வேட்பாளர்களை அறிவிக்க போகிறதாம்.
அதுமட்டுமல்ல, தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை பயன்படுத்தவும் பாஜக திட்டம் வகுத்து வருகிறதாம்..
பாஜக தனி அணி: இவர்களுக்காகவே பாஜகவில் தனி அணி உருவாக்கப்பட்டு மாநிலம், மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை கட்சியில் சேர்க்கும் பணி, பாஜக அரசு தொடர்பு பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, அந்தவகையில், மத்திய, மாநிலங்களில் 80 துறைகளிலிருந்து பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை கட்சியில் சேர்க்கவும் அல்லது ஆதரவாளர்களாக மாற்றவும், தேர்தல் நேரத்தில் இவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
சாத்தியக்கூறுகள்: இதற்கெல்லாம் காரணம், மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் விவரங்கள் தெரிந்திருக்கும் என்பதால், அந்த விவரங்கள் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் என்று கணக்கு போடப்படுகிறது. எனவே, ஓய்வு பெற்ற அதிகாரிகள் முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு உள்ளதாம். இது பாஜகவுக்கு சாத்தியங்களை பெற்றுத்தருமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications