Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வண்டலூர் பூங்காவினை பார்க்க ஆசையோடு வந்த 50 மாற்றுத்திறனாளிகள்.. நடந்த ஏமாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.150 கொடுக்க முடியாததால் சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் வண்டலூர் மிருக்காட்சியகத்தை சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக புகார் எழுந்துள்ளது. சக்கர நாற்காலியும் இல்லை என்றும் அரசு கொடுத்த ஸகூட்டரும் அனுமதி இல்லை என்றும் முறையிடவும் அலுவலர் இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1490 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. பிரமாண்டமான இந்த வண்டலூர் பூங்கா இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது. சிங்கம், புலி, கரடி, கழுதைப்புலி, மான், பாம்பு வகைகள், குரங்குகள், முதலைகள் மற்றும் யானைகள் என பல வனவிலங்குகள் வண்டலூர் பூங்காவில் வாழ்கின்றன.

50 differently-abled persons who came with desire to visit Vandalur Park were disappointed

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1,977 வன விலங்குகள் இருக்கின்றன. மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அரிய மற்றும் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கும் இடமாக இருக்கிறது. வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகள், தாவரங்களை காண்பது என்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். இதை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறாரகள். தமிழ்நாட்டில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, முதலை, ஏரளமான வனவிலங்குகளை ஒரே இடத்தில் காணக்கூடிய வாய்ப்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில்தான் இருக்கிறது. இப்பூங்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

நாட்டிலுள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக திகழ்கிறது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகத்தால் 2022-ம் ஆண்டில், நாட்டிலேயே சிறந்த மிருகக் காட்சி சாலை என மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் பூங்காவின் நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை கடந்த ஆண்டு தமிழக அரசு மாற்றியமைத்தது. அதன்படி, பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115-லிருந்து ரூ.200 ஆகவும், பேட்டரி வாகன கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும், சஃபாரி வாகன கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.150 ஆகவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் குழுவாக வந்தால் 5 முதல் 17 வயதுவரை ரூ.20 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. சக்கர நாற்காலிக்கான கட்டணமான ரூ.25 ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், வேன், பயணிகள் டெம்போ, மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக் கணக்கில் இருந்து நாள் கணக்கில் மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில் ரூ 150 கொடுக்க முடியாததால் சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் வண்டலூர் மிருக்காட்சியகத்தை சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக புகார் எழுந்துள்ளது. சக்கர நாற்காலியும் இல்லை என்றும் அரசு கொடுத்த ஸகூட்டரும் அனுமதி இல்லை என்றும் நெட்டிசன் ஒருவர் குற்றஞ்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+