50 கேள்விகள், 3 நாள் விசாரணை.. CBI பெயரில் அரசியல் அழுத்தமா? விஜய்க்கு ரிவர்ஸாக மாறும் பாஜக மூவ்?
சென்னை: விஜய் இன்று சிபிஐ முன்பு ஆஜராகி உள்ளார்... இது தேசிய அளவில் கவனத்தை பெற்று வருகிறது.. கரூர் வழக்கு தொடர்பாக நடத்தப்படும் இந்த விசாரணையானது எந்த மாதிரியான தாக்கத்தை அரசியல் களத்தில் விஜய்க்கு பெற்றுத்தரும்? தவெக தொண்டர்கள் என்ன சொல்கிறார்கள்? இதன் சாதக பாதக விளைவுகள் என்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சிபிஐ விசாரணை என்ற பெயரில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜயை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த நிகழ்வுகள், சட்ட ரீதியான விசாரணையைத் தாண்டி, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரசியல் அழுத்தம் விஜய் மீது
ஒரு வழக்கின் விசாரணை என்ற பெயரில், அந்த அமைப்பின் தலைவராக இருப்பவரிடம் விசாரணை நடத்துவது சட்டப்படி ஏற்ற நடைமுறையாக இருந்தாலும், இந்த விசாரணை அரசியல் ரீதியான அழுத்தத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, விஜயின் கடைசி படமான "ஜனநாயகன்" ரிலீஸை எதிர்நோக்கி இருக்கும் தருணத்தில் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது, திட்டமிட்ட அரசியல் நகர்வாகவும், அதனால்தான் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பது, அவரை அரசியல் களத்தில் முடக்குவதற்கான முயற்சி என்றும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன.
இத்தகைய நெருக்கடிகள், விஜய்க்கு நெகட்டிவ் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் காட்டிலும், தமிழக மக்களிடையே அவருக்கான அரசியல் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் சூழலையே உருவாக்கி உள்ளன.
அதாவது, பாஜக அரசால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக பார்க்கப்படும் இந்த விசாரணை, விஜய் மீதான "சிம்பத்தி"யை மக்களிடம் ஏற்படுத்த செய்யும்... அத்துடன் பாஜகவின் நேரடி அரசியல் எதிரி என்ற அடையாளத்தையும் விஜய் பெறுகிறார்.
பிளஸ் பாயிண்ட்ஸ்
எப்போதுமே தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை, பாஜக யாரை எதிர்க்கிறதோ, அவர்களுக்குத்தான் மக்களின் ஆதரவு அதிகரிக்கும் என்பதுதான் ஏற்கனவே நிலவும் பார்வை என்பதால், இந்த விசாரணை விஜய்க்கு அரசியல் ரீதியாக ஒரு பிளஸ் பாயிண்ட்டாகவே மாறும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அதுமட்டுமல்ல, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி நகரும் சூழலில், முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்வைக்க நினைக்கும் விஜய்க்கு, இத்தகைய தடைகள் மக்கள் மத்தியில் ஒரு அரசியல் எழுச்சியை உருவாக்கும் காரணமாக அமையும் என்கிறார்கள்..
இதனிடையே, விசாரணையின் போது விஜய்யிடம் கேட்க 50-க்கும் மேற்பட்ட முக்கிய கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் தயார் செய்துள்ளதாகவும், 3 நாட்கள் வரை விசாரணை நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை முடிந்த பிறகு இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட ரீதியாக ஒரு விசாரணையாக தொடங்கிய இந்த நடவடிக்கை, அரசியல் களத்தில் விஜயை முழுமையாக ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரித்து, அவரை மையமாக வைத்து புதிய விவாதங்களை உருவாக்கி விட்டுள்ளதாம்.
டெல்லி சிபிஐ விசாரணை
விசாரணைக்கு சிபிஐ ஆபீசில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்த நிலையில், விஜய் தரப்பில் பல கட்ட விவாதங்கள் முன்னதாக நடத்தப்பட்டதாம்.. விஜய்க்கு பதிலாக, பொறுப்பாளரை சிபிஐ விசாரணைக்கு அனுப்பி வைக்கலாமா? என்றுகூட விவாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் மாநில காவல் துறையிடமிருந்து விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தொடக்கத்தில் கோரிக்கை வைத்ததே தவெக கட்சிதான் என்பதால், இப்போது இந்த சம்மனை தவிர்ப்பது சரியல்ல என்றும், அதனால்தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்களாம்.
அதன்படி, டெல்லியில் நடைபெறும் சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று ஆஜராக உள்ள நிலையில், சிபிஐ அலுவலகம் மற்றும் அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.,,!!!
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications