சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆற்றில் துணி துவைத்த தெய்வானை.. அருகில் சென்ற முத்துசாமி.. ஜஸ்ட் 50 ரூபாய்க்காக.. ஹைகோர்ட் அதிரடி

50 ரூபாய்க்காக மனைவியை கொன்ற கணவனுக்கு தண்டனை உறுதியானது

Google Oneindia Tamil News

சென்னை: வெறும் 50 ரூபாய்க்காக மனைவியை கொலை செய்துள்ளார் கணவர்.. அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், முருகன்பதி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி.. இவர் முரட்டு குடிகாரர்.. எப்ப பார்த்தாலும் தண்ணி அடித்து கொண்டே இருப்பார்.

அப்படி தண்ணி அடித்துவிட்டால், அன்னைக்கு முழுவதும் மனைவி தெய்வானையிடம் தகராறு செய்து கொண்டே இருப்பார்.. போதாக்குறைக்கு மனைவியின் நடத்தை குறித்தும் சந்தேகப்படுவாராம் முத்துசாமி.

பார்த்தாலே பச்சை முகம்! ஆனா கோபம் மட்டும் வந்துச்சுனா வேற லெவல்தான்! யார் இந்த “பாகுபலி”? பரபர கோவை பார்த்தாலே பச்சை முகம்! ஆனா கோபம் மட்டும் வந்துச்சுனா வேற லெவல்தான்! யார் இந்த “பாகுபலி”? பரபர கோவை

தெய்வானை

தெய்வானை

2009ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, தெய்வானை ஒத்தக்கல் மண்டபம் ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது அவரிடம் சென்று குடிப்பதற்கு 50 ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார்... ஆனால், தெய்வானையோ தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த தெய்வானையை சரமாரியாக தாக்கிவிட்டார்..

6 முறை கத்தி குத்து

6 முறை கத்தி குத்து

அத்துடன், நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் 6 முறை கத்தியால் குத்திக் கொலையும் செய்துவிட்டார். பிறகு, தெய்வானை ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்ததை பார்த்ததும், பயந்துவிட்டார் முத்துசாமி.. உடனே, அதே கத்தியை எடுத்து, தனக்குத் தானே வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.... தெய்வானையின் அலறல் சத்தம்கேட்டு அங்கு சென்ற தெய்வானையின் சகோதரியும், அவரது கணவரும், தற்கொலைக்கு முயன்ற முத்துசாமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நீதிபதிகள்

நீதிபதிகள்

பின்னர் முத்துசாமி மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தினர் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் முத்துசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2010ல் தீர்ப்பளித்தது. இதை தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துசாமி மேல்முறையீடு செய்தார்... அந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

சாட்சியங்கள்

சாட்சியங்கள்

அப்போது முத்துசாமி தரப்பில், மனைவி கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சியங்கள் இருவரும், உறவினர் என்பதால் அவற்றை ஏற்க கூடாது என்றும், உள்நோக்கத்துடன் கொலை செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில், குடிப்பதற்கு பணம் தராதரால் கொலை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும், மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது...

தீர்ப்பு

தீர்ப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆறு முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள நிலையில், உள்நோக்கம் இல்லாமல் வேகத்தில் செய்த கொலை என கூறுவதை ஏற்கமுடியாது என்றும், குடிப்பழக்கம் காரணமாக தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் என சொந்த பிள்ளைகளே சாட்சியம் அளித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டி, முத்துசாமிக்கு கோவை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதிசெய்தும், அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர்.

English summary
50 rupees: chennai high court confirmed life imprisonmnent for man who stabbed his wife 50 ரூபாய்க்காக மனைவியை கொன்ற கணவனுக்கு தண்டனை உறுதியானது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X