முதல் கைது நான்தான்! கலெக்டருக்கு அதிகாரம் இல்லை! எமெர்ஜென்சியை நேரில் கண்டவர்கள்!
சென்னை: இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இந்த மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த அவசரக்காலத்தில் என்னென்ன கொடுமைகள் எல்லாம் நடந்தது என்பது பற்றி சிலர் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுச் சரியாக 49 ஆண்டுகள் முடிந்துள்ளது. நெருக்கடி நிலை நடைமுறையிலிருந்த போது நாட்டில் உள்ள பல தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அதாவது ஜூன் 25, 1975 அன்று, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, மாநில உரிமைகளை ஒடுக்கும் முயற்சியில் இறங்கினார். கிட்டத்தட்ட 21 மாதங்கள் அவசரக்கால நிலையை நடைமுறைப்படுத்தினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 352வது பிரிவு என்ன சொல்கிறது என்றால், போர் காலங்களிலோ அல்லது அந்நிய நாட்டுப் படை இந்தியாவை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும்போதோ, அப்படி இல்லை என்றால் உள்நாட்டுக்குள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தாலோ, நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் தீங்கு ஏற்பட்டால், அவசர நிலையைப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
அப்படியான எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாதபோது இந்திரா காந்தி தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள எமெர்ஜென்சியை கொண்டுவந்தார். ஆகவேதான், அந்த நெருக்கடி நிலையை இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு வரலாறு என எதிர்க்கட்சிகள் வர்ணித்து வருகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகைகள் சுதந்திரமாகச் செய்திகளை வெளியிடுவது தடை செய்யப்பட்டது. தணிக்கைக்கு பிறகே செய்திகளை வெளியிடலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 'துக்ளக்' பத்திரிகை அட்டைப் படத்தில் எந்தத் தலைப்பையும் போடாமல் கறுப்பு அட்டையை வெளியிட்டது. 'முரசொலி'யில் கிண்டலாக சில தலைப்புகளை வைத்து வெளியிட்டார் அதன் ஆசிரியர் மு. கருணாநிதி.

இன்று முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் எமெர்ஜென்சியில் கைது செய்யப்பட்டவர். அவருடன் அவரது கட்சியினர் சிட்டிபாபு உட்படச் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி 50 ஆண்டுகள் கடந்து அதன் சாட்சியாக மனித சான்றாகப் பலர் இன்றும் உள்ளனர். அந்தக் காலத்தில் கோயமுத்தூர் கலெக்டர் ஆக இருந்த லட்சுமிகாந்தன் தனது நினைவுகளை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். "எமெர்ஜென்சி நடைமுறைக்கு வந்த போது நான் தான் கோவை கலெக்டர். அப்படி ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரப்போகிறது என்று மக்களுக்கும் தெரியாது. அதிகாரிகளான எங்களுக்கும் தெரியாது. அந்தக் காலத்தில் நிலைமை அப்படித்தான் இருந்தது. ரகசியம் காக்கப்பட்டது.
கலெக்டருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எங்குப் பார்த்தாலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ராணுவத்தைக் கேள்வி கேட்கும் அதிகாரம் கலெக்டருக்கு இல்லை. மாநில அரசுதான் அதை முடிவு செய்ய வேண்டும். அவர்களுக்கும் எமர்ஜென்சி காலத்தில் முழு அதிகாரம் கொடுக்கப்படவில்லை. நான் கோவை ஆட்சியராக மாநில அரசுக்குத் தகவல் கொடுத்தேன். ஆனால், அதற்குள்ளாகவே மாநில அரசு கலைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசு முழுப் பொறுப்பை எடுத்துக் கொண்டது. ஒரு மாவட்ட ஆட்சியராக நான் செயல்படாமல் இருந்தேன்" என்று கூறியுள்ளார்.

திருச்சி வேலுச்சாமி தனது நினைவுகள் பற்றிக் கூறும்போது, "காமராஜர் இறந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் மிகப்பெரிய கொள்ளைக்காரனைப் பிடிப்பதைப் போல திருச்சியிலிருந்த 10 போலீஸ் வேன்களில் வந்து காவல்துறையினர் வந்து என்னைக் கைது செய்தனர். தமிழ்நாட்டில் எமெர்ஜென்சி காலத்தில் முதன்முதலாகக் கைது செய்யப்பட்டவன் நான் தான். எமெர்ஜென்சி வந்தது இந்த நாட்டின் போதாத காலம். இந்திரா காந்திக்கு ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் அதைக் கொண்டுவந்தார். அதற்குப் பின்னர் பகிரங்க மன்னிப்பை இந்திரா காந்தி நாட்டு மக்களிடம் கேட்டார்" என்று கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications