Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரூ.500".. மத்திய அரசின் மேஜர் அலர்ட்.. உங்க கைக்கு வரும் 500 ரூபாய் நோட்டில் இதெல்லாம் கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம் கைக்கு வந்து சேரும் பணம் கள்ள நோட்டா? நல்ல நோட்டா? என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? இதை படியுங்கள்

பணமதிப்பிழப்புக்கு பிறகு நாட்டில் கள்ள நோட்டுகள், கறுப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என்றார்கள்.. ஆனால் அதற்கு பிறகுதான், கள்ளநோட்டுகள் புழக்கம் நாட்டிலே அதிகரித்து விட்டதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு வருகின்றன.

500 Rupees note and Do you know how to identify fake Indian Currency Rs 500 note

கள்ள நோட்டுக்கள்: கடந்த 2021 ல் நாட்டிலேயே கள்ள புழக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தை பிடித்திருந்தது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்தது. தமிழகம் முழுவதும் இதை களைவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்..

கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் அடிக்கடி கிடைப்பதன் அடிப்படையிலும் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன..

கடலோர மாவட்டங்கள் உட்பட, கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளிலும், மீன் மார்க்கெட், காய்கறி சந்தை, கடைத்தெரு பகுதி உள்ளிட்ட பணப்புழக்கம் அதிக உள்ள பகுதிகளிலும் கள்ள நோட்டு புழக்க சம்பவம் நடந்து வருவதாக சொல்வதால், அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிகின்றன.

வித்தியாசம்: அந்தவகையில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள்தான் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. கடந்த 2020ம் ஆண்டில் மத்திய வங்கி, இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இவை நிறம், அளவு எல்லாமே பழைய நோட்டில் இருந்து வித்தியாசப்பட்டன.. எனினும், இந்த கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை..

போலீசார் நடவடிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும், கடைகளில் தரும் 500 ரூபாய் நோட்டு நல்ல நோட்டா? அல்லது போலியானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கும் சில வழிமுறைகளை மத்திய அரசே சொல்கிறது.. அந்தவகையில், புதிய 500 ரூபாய் நோட்டில் மொத்தம் 17 அடையாளங்கள் உள்ளனவாம். இவைகளை வைத்து, எளிதாக கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள்.

  • ரூ.500 பணத்தில் 500 என்பது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.
  • காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம், இவையெல்லாம் தடவி பார்த்தால் உணரும் வகையில் இருக்கும்.
  • பணத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவம் வலது பக்க மையத்தில் இருக்கும். (கள்ள நோட்டில் காந்தியின் உருவம் சரியாக இருக்காது. கார்ட்டூன் போன்ற உருவத்திலோ அல்லது உண்மையா நோட்டில் இருக்கும் வலது பக்கத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கும்)
  • 500 ரூபாய் நோட்டை மடிக்கும்போது, அது பச்சை கலரில் இருந்து இன்டிகோ கலருக்கு மாறும்.
  • பணத்தில் 500 என்று எழுத்தால் எழுதப்பட்டிருப்பது பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும்.
  • ரூபாய் நோட்டின் வலது பக்கத்தில் அசோகத் தூண் இருக்கும்.
  • வலது பக்கத்தில் அரை வட்டமான இடத்தில் ரூ.500 என்று எழுதப்பட்டிருக்கும்.
  • ரூபாய் நோட்டின் சீரியல் நம்பர், அச்சிடப்பட்ட ஆண்டு ஆகியவைகள் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை நீங்கள் சரிபார்த்து கொள்வதன் மூலம் உண்மையானதா இல்லை போலியான நோட்டா என்று எளிதாக கண்டறிய முடியும்.
  • புதிய ரூபாய் நோட்டில் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் குறியீடு மற்றும் பிரசார வாக்கியம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் 500 என்று இருப்பதை வெளிச்சத்தில் காணலாம். இது ஒளி உட்புகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+