“மாஸ்” காட்டிய செந்தில் பாலாஜி.. தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மூடப்படும்! சட்டசபையில் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் அதில், தகுதியான 500 சில்லறை விற்பனைக் கடைகளை கண்டறிந்து மூடுவோம் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த துறைகளின் அமைச்சர் செந்தில் பாலாஜி துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் குறிப்பாக பெரும்பான்மையான மக்களை ஈர்த்து இருப்பது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்புதான்.
தமிழ்நாட்டில் மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், அவரது இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் அரசுக்கு இதனால் நற்பெயர் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் இதுகுறித்து அவர் ஆற்றிய உரையில், "தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதில், தகுதியான 500 சில்லறை விற்பனைக் கடைகளை கண்டறியப்பட்டு மூடுப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்படும். டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100 தொகுப்பூதியம், விற்பனையாளர்களுக்கு ரூ.930 தொகுப்பூதியம் உயர்த்தி தரப்படும்.
அதேபோல் டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.840 தொகுதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பணியாளர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம் வழங்கப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.31.57 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்காக நிதி உதவி வழங்கப்படும். மது அருந்துவதற்கு அடிமை ஆகாமல் இருக்கவும் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, போதை மருந்துகளை தவறான வகையில் பயன்படுத்துவதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரகசிய தகவலாளர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி தரப்படும். எரி சாராயம், போலி மதுபானம், பிற மாநிலங்களில் கடத்தப்படும் மதுபாட்டில்களை கைப்பற்ற பெரும்பங்கு வகிக்கும் காவல் ஆளுநர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகையை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சமாக உயர்த்தி தரப்படும்." என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications