தமிழகத்தில் மேலும் 514 பேருக்கு கொரோனா உறுதி.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை ரொம்ப அதிகம்!
சென்னை: தமிழகத்தில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,39,866 பேராகும்.
Recommended Video

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பரவிய கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல பாதிப்பு குறைந்து பாதிப்பு எண்ணிக்கை 5 இலக்கத்திலிருந்து 3 இலக்கத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை இன்றைய தினம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இன்று 514 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 8,39,866 பேராகும். இன்று ஒரே நாளில் 53,649 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,61,76,919 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.
அது போல் இன்று ஒரே நாளில் 53,471 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,58,65,023 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 314 ஆண்களுக்கும் 200 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 254 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 533 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதுவரை 8,23,001 பேர் வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 4,494 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று ஒரே நாளில் 4 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை கொரோனாவிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 12,371 பேராகும். இன்று சென்னையில் மட்டும் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் ஒருவருக்கு செங்கையில் 25 பேருக்கும், கோவையில் 74 பேருக்கும், கடலூரில் 6 பேருக்கும் திண்டுக்கல்லில் 3 பேருக்கும் ஈரோட்டில் 17 பேருக்கும் நாமக்கல்லில் 9 பேருக்கும் திருவள்ளூரில் 34 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,31,711 பேராகும். அரியலூரில் 4,697 பேருக்கும் செங்கல்பட்டில் 51,641 பேருக்கும், கோவையில் 54,575 பேருக்கும், கடலூரில் 24,948 பேருக்கும், தருமபுரியில் 6594 பேருக்கும் காஞ்சியில் 29,288 பேருக்கும் திருவள்ளூரில் 43,626 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications