கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிபிசிஐடி புலனாய்வு குழுவில் மேலும் 56 போலீஸார் சேர்ப்பு
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி புலனாய்வு குழுவில் மேலும் 56 போலீஸார் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 17 வயது சிறுமி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து மாணவி இறப்புக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் 17 ஆம் தேதி கலவரம் மூண்டது. இதில் அந்த பள்ளியின் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் மாணவியின் மரணத்திற்கு சிலர் அழைப்பு விடுத்து போராட்டம் நடத்த ஆட்களை சேர்த்ததாக தெரிகிறது. இதை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபினவ் தலைமையில் சிபிசிஐடி புலனாய்வு குழு கடந்த 19ஆம் தேதி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நியமித்தார். அதில் 5 காவல் துறை உயரதிகாரிகள், 6 டிஎஸ்பிக்கள், 9 காவல் துறை ஆய்வாளர்கள், 3 சைபர் கிரைம் போலீஸார் இடம்பெற்றுள்ளார்கள்.
Recommended Video
இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்ஐக்கள், தலைமைக் காவலர்கள் என மேலும் 56 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications