இருமுடி, தைப்பூசம்.. மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை: இருமுடி மற்றும் தைப்பூச திருவிழாவையொட்டி பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருவார்கள் என்பதால் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 15 முதல் 57 ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. பெண்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் கோயிலாக இந்த கோயில் உள்ளது. பெரும்பலான கோயில்களில் பெண்கள் கருவறைக்குள் நுழைய முடியாது அல்லது வழக்கமான கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் இங்கு பெண்கள் மூலவர் கருவறைக்குள் நேரடியாகச் சென்று வழிபடலாம்.

பெண்கள் தாமே விக்ரகங்களுக்கு பூஜைகள் செய்யலாம். இந்த கோயிலில் தைப்பூசம், யுகாதி, தமிழ் புத்தாண்டு, சித்திரை பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, மார்ச் 3 அடிகளாரின் பிறந்தநாள் ஆகியவை முக்கிய விழாக்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருவார்கள். எனவே பக்தர்கள் வசதிக்காக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லவுள்ளது.
11017 லோக்மான்ய திலக் டெர்மினஸ் - காரைக்கால் எக்ஸ்பிரஸ்
11018 காரைக்கால் - லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ்
12635 சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ்
12636 மதுரை - சென்னை எழும்பூர் - வைகை எக்ஸ்பிரஸ்
12637 சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ்
12638 மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ்
12641 கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ்
12642 ஹஸ்ரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ்
12651 மதுரை - ஹஸ்ரத் நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்
12652 ஹஸ்ரத் நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்
12653 சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
12654 திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
12661 சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்
12662 செங்கோட்டை - சென்னை எக்மோர் பொதிகை எக்ஸ்பிரஸ்
12667 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
12668 நாகர்கோவில் - சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ்
16101 சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ்
16102 கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
16103 தாம்பரம் - இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
16104 இராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ்
ஆகிய ரயில்கள் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் 57 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications