தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. 6,472 பேருக்கு பாதிப்பு உறுதி
சென்னை: தமிழகத்தில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்தது. முதல்முறையாக ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு குறித்த செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டது.
இதில் இன்றைய தினம் மேலும் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.

எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள்
தமிழகத்தில் இன்று மட்டும் 62,112 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 21,57,869 பேரின் மாதிரிகள் சோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளன. இன்று மட்டும் 60,375 பேருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டது. இதுவரை 20,75,522 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றை தினம் 3,933 ஆண்களுக்கும் 2,539 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் 113 பரிசோதனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று மட்டும் 5,210 பேர் மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 1,36,793 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 88 ஆகும் . இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 3,232 பேராகும்.

சாலை மார்க்கம்
6,472 பேரில் 6,423 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் சர்வதேச விமான நிலையம் மூலம் மற்ற நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள், உள்நாட்டு விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள், மற்ற மாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக தமிழகம் திரும்பியவர்கள் ஆவர்.

கொரோனா பாதிப்பு
இன்று சென்னையில் 1,336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு 90,900 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1703 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர். செங்கல்பட்டில் இன்று மட்டும் 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மாவட்டங்களில் கொரோனா நிலவரம்
அது போல் கோவையில் 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திண்டுக்கல்லில் 107 பேரும், கள்ளக்குறிச்சியில் 134 பேரும், காஞ்சியில் 330 பேரும், மதுரையில் 274 பேரும், ராமநாதபுரத்தில் 100 பேரும் புதுகையில் 111 பேரும், ராணிப்பேட்டையில் 214 பேரும், தூத்துக்குடியில் 415 பேரும் நெல்லையில் 246 பேரும், திருவள்ளூரில் 416 பேரும், விருதுநகரில் 480 பேரும் திருச்சியில் 190 பேரும் வேலூரில் 117 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி, 5,849 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக 6ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications