தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்.. அரசு அதிரடி முடிவு.. எங்கெல்லாம் வருகிறது தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாகவும், பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2ம் கட்டமாகவும் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட திட்டம் போடப்பட்டு உள்ளது.

மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கபூர்வமான பங்கினை அளிக்க இயலும். முக்கிய சுகாதார குறியீடுகளில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. நல்ல பொது சுகாதாரத்தை பராமரிப்பதில் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பராமரிப்பதில் மற்ற மாநிலங்களை விட, நமது மாநிலம் முன்மாதிரி மாநிலமாக விரைந்து முன்னேறி வருகிறது.
நம்பர் 1: தமிழ்நாடு எப்போதும் மருத்துவ துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடிதான். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெரும்பாலும் இந்தியாவின் சுகாதார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக மாறியது, ஏனெனில் நாடு முழுவதிலும் இருந்து நோயாளிகளின் நிலையான வருகையை அப்போதில் இருந்தே சென்னை எதிர்கொண்டு வந்துள்ளது. 1835 ஆம் ஆண்டில், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிதான் மாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கான முதல் நிறுவனமாகும்.
தமிழ்நாடு மருத்துவம்: ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் இருந்து 45 முதல் 50 சதவீத சுகாதார சுற்றுலாப் பயணிகளையும் உள்நாட்டில் 40 சதவீதத்தையும் ஈர்க்கிறது. இந்தியாவில் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளுடன், தமிழ்நாடு நாட்டிலேயே மிகவும் மேம்பட்ட சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது.
கொரோனா காலத்திலும் கூட தமிழ்நாட்டின் சுகாதாரம் மிக சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பொது சுகாதாரத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளது. மேலும் மலிவு விலையில், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதால் தமிழ்நாடு மிகவும் பிரபலமாக உள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் காரணமாக சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்கவே கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பு சிறப்பான நிலையை அடைந்தது.
தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வசதிக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு சென்னைக்கு தினம் தினம் வரக்கூடிய பயணிகள்தான். தமிழ்நாட்டில் மருத்துவ துறை, மருத்துவ சேவை, மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள், மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை என்று அனைத்திலுமே நம்பர் 1 இடத்தில் உள்ளது.
புதிய மருத்துவ கல்லூரிகள்: தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று ஒவ்வொரு மாவட்டமும், மண்டலங்களும் மருத்துவ துறையில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாகவும், பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2ம் கட்டமாகவும் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட திட்டம் போடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Outdoor Plants: லிக்விடேட்டரை தூக்கி போடுங்கள்! வீட்டிற்குள் கொசு வராமல் தடுக்கும் வைங்க! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications