2020-2022ல் கொரோனா வந்தவர்களில்.. 6% பேர் திடீரென 2023ல் தமிழ்நாட்டில் மரணம்! ஷாக் தரும் ரிப்போர்ட்
சென்னை: இந்தியாவில் அடுத்தடுத்து இளைஞர்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக கொரோனாவிற்கு பின் பலர் பலியாகும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த நிலையில்தான் கொரோனாவிற்கு பின் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூன் 4 அன்று, மதுரை பழங்காநத்தத்தில் உடற்பயிற்சியை முடித்த இளைஞர் ஸ்ரீ விஷ்ணு ஜிம்மில் சுருண்டு விழுந்து பலியானார். சக ஜிம் உறுப்பினர்கள் 27 வயதான ஸ்ரீ விஷ்ணுவை எல்பி மருத்துவமனைக்கும் பின்னர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். வெறும் 27 வயதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அந்த இளைஞர் ஜிம்மில் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் கடந்த மார்ச் மாதம் ஆவடியைச் சேர்ந்த 25 வயதான பாடிபில்டர் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஸ்டெராய்டுகள் மற்றும் பிற சப்ளிமெண்ட்ஸ்களை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் அந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். நெமிலிச்சேரியில் வசிக்கும் சபரிமுத்து என்ற ஆகாஷ், 25, உடற்கட்டமைப்பு போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தார். இதற்காக அவர் மருந்துகளை எடுத்து இருந்தார்.
தொடர் மரணங்கள்: இதில் அவர் கிட்னி செயல் இழந்தது. அதை தொடர்ந்து அவரின் மற்ற உறுப்புகள் செயல் இழந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பலியானார். அதிலும் சாவதற்கு கடந்த சில நாட்கள் முன்பு வரை மூச்சு விட முடியாமல் அவர் கடுமையாக திணறினார். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற சில மாநிலங்களிலும் இதேபோல் ஜிம்மில் இளைஞர்கள் பலியாவது அதிகரித்து வருகிறது.
முக்கியமாக கொரோனாவிற்கு பின் இப்படி பலர் ஜிம்மிலேயே பலியாகி வருகின்றனர். பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது வழக்கம் ஆகி உள்ளது. ஸ்டெராய்டு ஓவர் டோஸ் காரணமாக மரணம் ஏற்படுவதை கூட ஏற்றுக்கொள்ள முடியும் . ஆனால் இந்த சாதாரண மரணங்கள் ஜிம் பயிற்சி, கொரோனாவிற்கு பின்பான மாரடைப்பு வாய்ப்புகள் ஆகியவை மீது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடக்கிறது?: இப்படி இந்தியா முழுக்க பல சம்பவங்கள் நடந்து உள்ளன. ஜிம்மிற்கு செல்லும் ஆண்கள் மட்டும் இப்படி திடீர் திடீரென மாரடைப்பு வந்து பலியாவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. டயட் காரணமா? போதிய தண்ணீர் குடிக்காததா? அதிக உடல் பயிற்சி காரணமாக ஏற்படும் வேகமாக மூச்சு இரைப்பா? அதிக எடை தூக்குவதா? புரோட்டீன் பவுடர் எடுப்பதா? கொரோனாவிற்கு பின்பான நீண்ட கால பக்க விளைவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதிர்ச்சி காரணம்: இந்தியாவில் அடுத்தடுத்து இளைஞர்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக கொரோனாவிற்கு பின் பலர் பலியாகும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த நிலையில்தான் கொரோனாவிற்கு பின் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தமிழ்நாடு சுகாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை கோவிட் 19 நோயிலிருந்து மீண்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட 6% பேர் ஜூலை 2023க்குள் இறந்துவிட்டனர் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பசியின்மை மற்றும் தொடர்ச்சியான சோர்வு போன்ற தொடர்ச்சியான கோவிட்-க்குப் பின் ஏற்படும் அறிகுறிகள் ஏற்பட்டு அதன்பின் உடல் நலிவடைந்து இவர்கள் பலியாகி உள்ளனர்.
COVID ஏற்பட்டதற்கு பின்பான காலத்தில் 87% நோயாளிகள் தொடை எலும்பின் அவஸ்குலர் நெக்ரோசிஸ் என்ற பாதிப்பை பெற்றுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 6% இறப்புகளில், 20% பேர் 61-80 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 1% க்கும் குறைவானவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இந்த அறிக்கை சொல்கிறது. கடுமையான உடல் பாதிப்பு, சோர்வு, மூச்சு திணறல் எல்லாம் ஏற்பட்டு இவர்கள் பலியாகி உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications