6 மணிக்கு மேல்.. அப்படியே மாறிய காட்சிகள்.. பிபிஇ உடைக்கு மாறிய வாக்குச் சாவடி ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாலை 6 மணிக்கு பிறகு வாக்குச் சாவடி மையங்களில் ஊழியர்கள் கொரோனா கவச உடை அணிந்ததால், மருத்துவமனை போன்ற சூழல் நிலவியது.

இன்று காலை 7 மணி முதல் தமிழகம் முழுக்க 234 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா காலம் என்பதால், இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 6 p.m. to 7 p.m. only coronavirus patients can be allowed to cast their vote in Tamilnadu

ஆனால் , கொரோனா நோய் பாதித்தவர்கள் வரும் போது பிறர் அவர்களுடன் சேர்ந்து வாக்களிப்பது ஆபத்தானது. நோய் பரவும் அபாயம் இருக்கிறது என்பதால் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்கு உள்ளே நோய் பாதித்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 6 p.m. to 7 p.m. only coronavirus patients can be allowed to cast their vote in Tamilnadu

அதே நேரம் மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு செல்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டிருக்கும். அதை வைத்து 6 மணிக்கு மேலும் ஓட்டு போடலாம். இவர்கள் வாக்களித்த பிறகு கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

 6 p.m. to 7 p.m. only coronavirus patients can be allowed to cast their vote in Tamilnadu

இந்த நிலையில், மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பணியிலிருந்த ஊழியர்களுக்கு கொரோனா பிபிஇ கிட் வழங்கப்பட்டது. அவர்கள் 6 மணிக்கு மேல் முழு கவச உடை அணிந்து காணப்பட்டனர். இதனால் மருத்துவமனை போன்ற சூழல் நிலவியது. கொரோனா கவச உடை அணிந்தபடி கனிமொழி வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+