அடேங்கப்பா.. அமேசானில் ஒரு பிளாஸ்டிக் வாளி விலை ரூ 26 ஆயிரம்! இஎம்ஐ ஆப்ஷனும் இருக்கு!
சென்னை: அமேசானில் பிளாஸ்டிக் வாளியின் விலை ரூ 26 ஆயிரம் என்பதால் இதை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த பக்கெட்டை வாங்குவதற்கு மாதத் தவணை வசதியும் இருக்கிறதாம்.
ஒரு சின்ன குண்டூசியாக இருந்தாலும் அதை கடைக்கு போய் வாங்கிய காலம் போய் இன்று நகைகள் வரை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வாங்கும் அளவுக்கு மின்னணு விற்பனை மக்களிடையே அதிகரித்துள்ளது.
ஒரு செல்போன் வாங்குவதற்கு கூட கடைகளுக்கு போய் மாடல் பார்த்து வாங்குவதில்லை. உட்கார்ந்த இடத்தில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட செயலிகளில் பணம் செலுத்தி வாங்கி கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது.

பழுது
ஒரு வேளை ஏதாவது பழுது ஏற்பட்டாலும் நிபந்தனைக்குட்பட்ட பழுதுகளுக்கு அந்த பொருளை திருப்பி ஈகாமர்ஸ் நிறுவனத்திற்கே அனுப்பினால், நமக்கு வேறு பொருளோ அதற்கான பணமோ கிடைத்துவிடும். இந்த நவீன உலகில் பெரும்பாலும் மக்கள் இதையே விரும்புகிறார்கள்.

மின்னணு நிறுவனங்கள்
அதிலும் நிறைய மின்னணு நிறுவனங்களில் குறிப்பிட்ட பொருளின் விலையை ஒப்பிட்டு பார்த்து பின்னர் எங்கு குறைந்து காணப்படுகிறதோ அங்கு வாங்குகிறார்கள். அதற்காக வரட்டி எல்லாம் விற்பதா என்ற கேள்வியும் எழுகிறது. அமேசானில் வரட்டி விற்பனை செய்யப்பட்டது. இதை பல வாடிக்கையாளர்கள் கிண்டல் செய்தனர்.

இந்தியா
இந்தியாவில் இருப்போருக்கு இந்த வரட்டி எளிதாக கிடைத்து விடும். ஆனால் வெளிநாடுகளில் இருப்போருக்கு பசு மாட்டு வரட்டி என்பது குதிரை கொம்பு. வீட்டில் ஹோமம் வளர்க்கும் போது வரட்டிகள் தேவை. இதனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக வரட்டி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என நியாயப்படுத்தப்பட்டது.

6 செட் பக்கெட் ரூ 25,999
ஆனால் தற்போது நெட்டிசன்கள் ஒருவர் போட்டுள்ளது அதிர்ச்சி கலந்த செய்தியாகும். அதாவது ஒரு பிளாஸ்டிக் வாளி 6 செட் ரூ 25,999 மட்டுமே. அதுவும் 28 சதவீத விலைகுறைப்புக்கு பிறகு இந்த விலையாம். இதற்கு மாத தவணை வசதி எல்லாம் இருக்கிறதாம். இலவச டெலிவரியாம். இன்னிக்கு ஆர்டர் போட்டால் மே 29 ஆம் தேதி கிடைக்கும்.

55 சதவீதம்
ஆனால் ஸ்டாக் தீர்ந்து போய்விட்டதாம். அது போல் குளிப்பதற்கு பயன்படுத்தும் பக்கெட்டின் விலை 55 சதவீத விலைக் குறைப்புக்கு பிறகு 9 ஆயிரமாம். இதை பார்க்கும் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சிலர் தசம புள்ளியை மறந்திருப்பர் என்கிறார்கள். 259.99 ரூபாய்க்கு பதிலாக ரூ 25999 என போட்டிருக்கலாம். ஆனால் இன்னும் சிலரோ போய் எம்ஆர்பியை பாருங்க ரூ 35,900 இருக்கிறது என்கிறார்கள். நிஜமாகவே அந்த பக்கெட்டின் விலை இவ்வளவா இல்லை தொழில்நுட்ப கோளாறால் இப்படி ஒரு விலையை காட்டுகிறதா என தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications