பளீர் முடிவு.. மொத்தமாக 60 பேரை.. எதிர்பாராமல் உள்ளே இறக்கிய எடப்பாடி.. "கேம் சேஞ்சிங்" திட்டமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக சார்பாக இந்த தேர்தலில் களமிறங்க போகும் 60 பேர்தான் மிகப்பெரிய கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஒரு ஆளும் கட்சி தேர்தலை சந்திக்கும் போது அதற்கு இரண்டு பிரச்சனைகள் இருக்கும். முதல் விஷயம் எதிர்கட்சி வைக்கும் குற்றச்சாட்டுகளை சமாளிப்பது. ஆட்சியில் இருந்த காரணத்தால் ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சி எளிதாக குற்றச்சாட்டுகளை வைக்க முடியும்.

இன்னொரு விஷயம்.. ஆளும் கட்சிக்கு எதிராக தேர்தல் நேரத்தில் இருக்கும் மக்கள் எதிர்ப்பு. பொதுவாக ஆளும் கட்சி தேர்தலை சந்தித்ததாலே.. அது எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் கொஞ்சம் கோபத்தில் இருப்பார்கள். இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை என்று ஆளும் கட்சி மீது மக்கள் கோபத்தில் இருப்பார்கள்.

தோல்வி

தோல்வி

இதனால்தான் பெரும்பாலான தேர்தல்களில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தோல்வி அடைகிறார்கள். இதை தடுக்கவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரே நபர்களுக்கு அடிக்கடி வாய்ப்பு கொடுக்காமல் புதிய வேட்பாளர்களை களமிறக்குவார். புதிய வேட்பாளர் வருவதால் மக்களும் நம்பிக்கையோடு வாக்களிப்பார்கள். ஒரே வேட்பாளரை மீண்டும் மீண்டும் ஜெ களமிறக்க மாட்டார்.

களமிறக்க மாட்டார்

களமிறக்க மாட்டார்

ஆனால் இந்த முறை தமிழக முதல்வர் பழனிசாமி ஸ்மார்ட் யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளார். இதுவரை 177 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்க்களாக இருக்கும் 35 பேருக்கு மீண்டும் தேர்தலில் அதிமுக வாய்ப்பு கொடுத்து உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களில் 47 பேருக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

மற்ற எம்எல்ஏக்கள் எல்லோரும் மீண்டும் தேர்தலில் வாய்ப்பு பெற்று உள்ளனர். அமைச்சர்கள் பாஸ்கரன், வளர்மதி, நிலோபர் கபீல் ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படவில்லை. மொத்தம் 60 புதிய முகங்கள் இந்த தேர்தலில் அதிமுக மூலம் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இரண்டு விஷயங்களை முதல்வர் பழனிசாமி சமாளித்து உள்ளார்.

சமாளிப்பு

சமாளிப்பு

அதன்படி அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கொடுத்து , அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறாமல், அவர்கள் கட்சிக்குள் பிரச்சனை செய்யாமல் தக்க வைத்துள்ளார். கட்சிக்குள் யாரும் அதிருப்தி ஆகாமல் தடுத்து உள்ளார். இன்னொரு பக்கம் 60 புதிய வேட்பாளர்களை களமிறக்கி அசத்தி உள்ளார். இந்த 60 பேரும்.. ஏற்கனவே மக்கள் மத்தியில் பெயர் எடுக்காத 60 பேருக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

மக்கள்

மக்கள்

அதாவது மக்களின் எதிர்ப்பு அதிகம் இருக்கும், வெற்றிபெற வாய்ப்பு குறைவாக இருக்கும் 60 பேரை தூக்கிவிட்டு.. அவர்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்களை கொண்டு வந்துள்ளார். ஆட்சிக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி நிலவலாம், எம்எல்ஏக்களுக்கு எதிராகவும் அதிருப்தி நிலவலாம் என்பதால் இப்படி 60 புது முகங்களை எடப்பாடி பழனிச்சாமி உள்ளே இறக்கி இருக்கிறார்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக வந்த ரிப்போர்ட்டை அடுத்த அதிமுக இவர்களை களமிறக்கி உள்ளது என்கிறார்கள்.இந்த 60 பேரின் வெற்றிதான் அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் என்கிறார்கள்.. அதிருப்தியை சமாளிக்க இவர்களை கொண்டு வந்துள்ளார்.

வெல்லும்

வெல்லும்


இவர்கள் வென்றால் அதிமுகவும் வெல்லும், இவர்கள் தோல்வி அடைந்தால் அதிமுகவும் தோல்வி அடையும். இந்த 60 புதிய முகங்கள்தான் கேம் சேஞ்சர்களாக இருக்க போவது. இவர்களின் பின்புலம், வாக்கு வங்கி, மக்கள் ஆதரவு என்று பல விஷயங்களை ஆராய்ந்துவிட்டு களமிறக்கி உள்ளனர் .

கேம் சேஞ்சர்

கேம் சேஞ்சர்

இந்த 60 பேரில் பெரும்பாலான வேட்பாளர்கள் திமுகவை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். மீதம் உள்ளவர்கள் திமுகவின் கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். புது முகங்கள் திமுகவிற்கு எதிராக எப்படி போட்டியிடுவார்கள் என்பதை பொறுத்தே இந்த தேர்தலின் முடிவுகள் மாற போகிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+