60% மானியம் ஆழ்கடல் படகுகளுக்கு.. பெண் மீனவர்களுக்கு ரூ.72 லட்சம் சலுகை.. தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதிக விலை கொண்ட படகுகளை வாங்க முடியாமல் பல மீனவர்கள் தவித்து வருகிறார்கள்.. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மீனவர்கள் வாங்கும் படகுகளுக்கு பல லட்சம் ரூபாய் மானியம் கிடைப்பதுடன், வங்கிக் கடனுக்கான வட்டியையும் அரசே ஏற்கிறது. இதனால் மீனவர்களின் கடன் சுமை குறைவதுடன், வருமானத்தை பெருக்கவும் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

2026-27ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் மரியவில்சன் ஆழ்கடல் மீன்பிடி படகு திட்டம் குறித்து அறிவித்திருந்தார். பாரம்பரிய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கு மானியத்துடன் கூடிய படகுகள் வாங்க வழி செய்யப்படும் என்றும், வங்கிக் கடனுக்கான வட்டி மானியமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

Deep Sea Fishing Boats PMMSY Scheme Fishing Boat Subsidy

25 ஆழ்கடல் மீன்பிடி படகுகள்

இந்நிலையில் தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆழ்கடல் மீன்பிடி படகு திட்டத்திற்கு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 நவீன படகுகள் வாங்க ரூ.13.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 20 படகுகள் பொது பிரிவு மீனவர்களுக்கும், 5 படகுகள் பெண் மீனவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் ஒரு படகின் விலை ரூ.1.20 கோடியாகும்.. இதில் பொது பிரிவு மீனவர்களுக்கு 40 சதவீதம் மானியம் கிடைக்கும். மத்திய அரசு ரூ.28.80 லட்சமும், தமிழக அரசு ரூ.19.20 லட்சமும் வழங்கும். ஆக மொத்தம் ரூ.48 லட்சம் மானியமாக கிடைக்கும். மீனவர்கள் தங்கள் பங்காக ரூ.12 லட்சம் செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.60 லட்சம் வங்கிக் கடனாக வழங்கப்படும்.

60 சதவீதம் மானியம்

பெண் மீனவர்களுக்கு 60 சதவீதம் மானியம் கிடைக்கும். இதில் மத்திய அரசு ரூ.43.20 லட்சமும், தமிழக அரசு ரூ.28.80 லட்சமும் வழங்கும். மொத்தம் ரூ.72 லட்சம் மானியமாக கிடைக்கும். மீனவர்கள் தங்கள் பங்காக ரூ.12 லட்சம் செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.36 லட்சம் வங்கிக் கடனாக வழங்கப்படும். இந்த திட்டம் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

வங்கிக் கடன் வட்டியையும் ஏற்கும் அரசு

இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பு, மீனவர்கள் வாங்கும் வங்கிக் கடனுக்கான வட்டியை தமிழக அரசே செலுத்துவதுதான். இதுவரை படகு வாங்க மானியம் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது கடன் வட்டியையும் அரசு ஏற்கிறது.

இதன்படி, 12 சதவீத வட்டியில் 7 ஆண்டுகளுக்கு வாங்கப்படும் கடனுக்கான வட்டியை அரசு செலுத்தும். ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் வட்டித் தொகையை வங்கிக்கு நேரடியாக வழங்கும். இதனால் மீனவர்கள் செலுத்த வேண்டிய கடன் சுமை குறையும். 7 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய கடனை 4 ஆண்டுகள் 9 மாதங்களிலேயே முடிக்க முடியும்.

பொது பிரிவு மீனவர்களுக்கான கடனில் ரூ.17.47 லட்சம் வட்டியை அரசு ஏற்கும். இதனால் அவர்கள் மாதம் ரூ.1,05,916 EMI செலுத்தினால் போதும். பெண் மீனவர்களுக்கு ரூ.10.48 லட்சம் வட்டியை அரசு ஏற்கும். அவர்கள் மாதம் ரூ.63,550 EMI செலுத்த வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு ரூ.4.02 கோடி ஒதுக்கீடு

இந்த வட்டி மானியத்திற்காக மட்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.4.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2026-27ம் ஆண்டுக்கு ரூ.1.51 கோடியும், 2027-28ம் ஆண்டுக்கு ரூ.1.15 கோடியும், 2028-29ம் ஆண்டுக்கு ரூ.80.25 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் அதிக விலை கொண்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவது மீனவர்களுக்கு எளிதாகும். பெரிய கடன் சுமை இல்லாமல் படகு வாங்க முடியும். வட்டியையும் அரசு ஏற்றுக்கொள்வதால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை குறையும்...

அதுமட்டுமல்ல, ஆழ்கடலுக்கு சென்று அதிக மதிப்புள்ள மீன்களை பிடிக்கவும், அவற்றை படகிலேயே பாதுகாத்து விற்பனை செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மீனவர்களின் வருமானம் அதிகரிக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் இந்த திட்டம் கண்டிப்பாக உதவும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+