60 ஆயிரம் ரூபாய் கூலிங் கிளாஸ்.. அழகான ஒயிட் ஹவுஸ்.. தெருக்குரல் அறிவு ரியல் லைஃப்
சென்னை: தன் மூதாதையர்கள் இலங்கை தேயிலைத் தோட்டத்தில் கூலிகளாக வேலைப்பார்த்தவர்கள் என்றும் அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் என் பெற்றோர்கள் என்றும் தெருக்குரல் அறிவு தெரிவித்துள்ளார்.
எஞ்சாமி’ பாடல் மூலம் பட்டிதொட்டி முழுக்க தனக்கான புகழைச் சம்பாதித்தவர் தெருக்குரல் அறிவு. அதன் பின் தலித் எழுச்சி மேடைகளில் அவர் ஏற்படுத்திய அதிர்வு அவரை உலகம் முழுக்க இட்டுச் சென்றது. கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு 'குக்கூ குக்கூ’ பாடல் யூடியூபில் வெளியான போது கூடவே சில சர்ச்சைகளும் எழுந்தன. இதுவரை இந்தப் பாடலை 500 மில்லியன் மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.

ஆனால், இந்தப் பாடல் வெளியான பிறகு உரிய அளவு மரியாதை எனக்குக் கிடைக்கவில்லை என அறிவு குற்றஞ்சாட்டினார். இதனால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகிய இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. எப்படி இருந்தாலும், அறிவுக்கு மிகப் பெரிய சர்வதேச அங்கீகாரத்தை இந்தப் பாடல்தான் ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. இன்றைக்குச் சுதந்திர பாடகராகப் பல நாடுகள் சென்று அறிவு தன் இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார். அவர் தனது குடும்பம், சென்னை வாழ்க்கை எனப் பல மனதிற்கு நெருக்கமான விசயங்களை ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தெருக்குரல் அறிவு பேசுகையில், “முதலில் வளசரவாக்கத்தில்தான் குடியிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் திடீரென்று அதை காலி பண்ணச் சொல்லிவிட்டார். அப்போது நான் கனடாவிலிருந்தேன். நண்பர்கள் தகவல் சொன்னார்கள். என் மாமா உடனடியாக ஒரு வீட்டைப் பார்த்துக் கொடுத்தார். இந்த வீட்டில் நானும் என் நண்பர்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். பாட்டு எழுதுவது, மியூசிக் போடுவது என சகலமும் இங்குதான் நடக்கும். என் உடன் எப்போதும் மாமா இருப்பார்” என்றபடி தன் புதிய வீட்டு அனுபவத்தைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் தெருக்குரல் அறிவு.
அவரது புதிய வீடு ஆடம்பரமாகவே இருக்கிறது. வீட்டில் ஒரு பியானோ, சிதார் எனப் பல இசைக் கருவிகள் இருக்கின்றன. பார்க்க வெள்ளை வெளேர் எனக் காட்சி தரும் வீட்டில் ப்ளாக் அண்ட் ப்ளாக் உடையில் கருப்புக் கண்ணாடியோடு வலம் வருகிறார் அறிவு. அவர் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியின் விலை 600 டாலராம். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய்.
“கனடாவில் இருக்கும் என் உறவினர்தான் இதைப் பரிசாகக் கொடுத்தார். இதன் விலையைக் கேட்டவுடன் அசந்து போய் பயன்படுத்தாமல் பீரோவில் வைத்துவிட்டேன். இவ்வளவு விலை உயர்ந்த பொருளைப் பயன்படுத்த வேண்டுமா? எனக் கூச்சம். பிறகு ஒருநாள் எடுத்துப் போட்டுப் பார்த்தேன். அணிந்த பிறகு ஒரு ஃபீலிங் கிடைத்தது. அதிலிருந்து கழற்றுவதே இல்லை” என்கிறார்.
”எங்கள் அப்பா ஒரு கல்லூரி பேராசிரியர். அவர் ஒரு அம்பேத்கரிஸ்ட். நிறைய சமூகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார். எங்க அப்பாதான் எங்கள் ஊரிலேயே முதல் பிஹெச்டி வாங்கியவர். பஸ் வசதியே இல்லாத ஒரு ஊரிலிருந்து வெளியே வந்து மெட்ராஸ் யூனிவர்சிடியில் அவர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். அவர் கனவு கண்ட வாழ்க்கையைத்தான் நான் இப்போது வாழ்ந்து வருகிறேன்.
என் அம்மா ஒரு டீச்சர். என் பாட்டி படிக்காதவர். அவரது பெற்றோர் இலக்கை தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து போனவர்கள். அதன்பின் பாட்டி இங்கே வந்து கூலி வேலைகள் செய்து என் அம்மாவைப் படிக்க வைத்தார். இத்தனை வருஷமா இதை எல்லாம் நான் வெளியே சொல்லவே இல்லை. இசை பின்புலம் இல்லாத குடும்பம் என்பதால் பாட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து இருக்கிறேன். இப்போதுதான் அதை நான் உணர்கிறேன். நாம் ஏன் பயப்பட வேண்டும்? என் குடும்பத்தைப் பற்றி தைரியமாகப் பேச வேண்டும் என நினைத்து இப்போது பேசுகிறேன்.
இது வாடகை வீடுதான். எனக்கு பெரியதாகச் சொந்த வீடு வாங்க வேண்டும். பங்களா, கார் என்று வசிக்க வேண்டும் என்று ஒரு ஆசையும் இல்லை. இப்போது எனக்குக் கிடைத்துள்ள வாழ்க்கையே ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். எந்த நாட்டுக்குப் போனாலும், எந்த வீட்டுக்குப் போனாலும் என்னை அவர்களின் வீட்டில் ஒருவராகப் பார்க்கிறார்கள். உபசரிக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும். சொந்த வீடா? வாடகை வீடா? என்பது முக்கியமல்ல. இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுவே என் கனவு, ஆசை எல்லாம்” என்கிறார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க











Click it and Unblock the Notifications