666 கோடி எடப்பாடியின் "நடுக்கம்"? 100 சீட் கேட்டாரா அமித் ஷா.. பாஜகவில் கரைய போகுதா அதிமுக: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடியூரப்பாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சருக்கு 666 கோடி ரூபாய் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக 12 கோடி ரூபாய் லஞ்சப்பணத்தை எடப்பாடியின் சம்பந்தி மகன் அன்று கொண்டு போய் தந்ததாகவும், இது தொடர்பான வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதற்காக, அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தாகவும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அப்போதிருந்து குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜகவுடன் எடப்பாடி மீண்டும் உறவு வைக்க இதுவே காரணம் என்றும் சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தந்துள்ள பேட்டி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Aagayam Tamil என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்.. செங்கோட்டையன் கோபி தொகுதியின் எம்எல்ஏ.. அமித்ஷா, நிர்மலா சீதாராமனுக்கு, அதிமுக பொதுச்செயலாளரை சந்திப்பதால் அனுகூலம் அதிகமா? அல்லது கோபி எம்எல்ஏவை சந்திப்பதால் லாபம் அதிகமா?

Edappadi Palanisamy BJP

கர்சிப்பால் முகத்தை மூடி

எடப்பாடி பழனிசாமியிடம் 62 எம்ஏக்கள் , 3 எம்பிக்கள் என கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.. இவ்வளவு வலுவானவரை இழக்க விரும்பினால், இதன் பாதிப்பு அதிமுகவுக்கு இல்லை, பாஜகவுக்குதான்.

அமித்ஷாவை சந்தித்துவிட்டு வரும்போது, கர்சிப்பை வைத்து முகத்தை எடப்பாடி மறைத்ததாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.. அமித்ஷா மிரட்டினார், அதனால் எடப்பாடியின் முகமும் இறுக்கமாகியிருக்கிறது என்றும் செய்திகள் ஓடுகின்றன.. அதாவது 100 சீட்டை பாஜகவுக்கு ஒதுக்கிவிடுமாறும், கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும என்றும் அமித்ஷா எடப்பாடியிடம் சொன்னாராம்.. இதற்கு எடப்பாடியால் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை..

பிளக்கப்படுமா அதிமுக

அதேசமயம், எடப்பாடிக்கு பல வழிகளில் பாஜகவால் சிக்கலை ஏற்படுத்த முடியும்.. குறிப்பாக, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் இவர்களை வைத்து, அதிமுகவை பிளப்பதற்கான ஒரு முயற்சியும் நடந்தது.. ஆனால், இந்த முயற்சியை எடப்பாடி பழனிசாமி முறியடித்துவிட்டார்..

எனினும் அதிமுகவை கட்டுப்படுத்த தேவை அமித்ஷாவுக்கு உள்ளது.. இதற்கு காரணம், வருகிற விஜய தசமியோடு ஆர்எஸ்எஸ் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்களாகிவிட்டது.. காங்கிரஸ் கட்சியே இல்லாத இந்தியா என்பதே ஆர்எஸ்எஸ்ஸின் லட்சியம் ஓரளவு தற்போது நிறைவேறியும் உள்ளது..

5ஐ 50 ஆக மாற்ற பிளான்

எனவே, தமிழ்நாட்டிலும் திமுக, அதிமுகவுக்கு இணையாக, பாஜக எம்எல்ஏக்களையும் பெற வேண்டும், இந்த தேர்தலில் எடப்பாடிக்கு நெருக்கடியை தந்தாவது, எப்படியாவது குறைந்தபட்சம் 50 எம்எல்ஏக்களையாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.. இதற்காக அதிமுகவுக்கு நெருக்கடியை தர துவங்கியிருக்கிறது.

தற்போதுள்ள பாஜக எம்எல்ஏவை, 50 ஆக மாற்றுவதே அமித்ஷாவின் திட்டம்.. ஆனால், எடப்பாடி இதற்கு ஒப்புக்கொள்வாரா தெரியாது.. தற்போது இந்த பேச்சுவார்த்தைதான் அமித்ஷா-எடப்பாடி இடையே ஓடிக்கொண்டிருக்கிறது.. இந்த விஷயத்தில் பேரத்தை பேசுவதற்காகவே, செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரனை சேர்த்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டும் வருகிறது.

மிரட்டி பெற முடியாது

எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானம்தான் முக்கியம் என்று நேற்று முன்தினம் எடப்பாடி சொல்கிறார்.. அப்படியானால் ஏதோ ஒரு அழுத்தம் எடப்பாடிக்கு தரப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.. இந்த விஷயம் அதிமுக தொண்டர்களுக்கு தெரிந்தால், அவர்கள் எப்படி பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடுவார்கள், எடப்பாடியை பாஜக மிரட்டலாம்.. ஆனால், அதிமுக தொண்டர்களை மிரட்டமுடியாது.. அதிமுக தொண்டனின் வாக்கை மிரட்டியும் பெற முடியாது.

எனவேதான், இப்போதைக்கு செங்கோட்டையன், வேலுமணி இருவரும் பாஜகவுக்கு தேவைப்படுகிறார்கள்.. இவர்களை வைத்து, அதிமுகவை பிளக்க முடியுமா? என்று பாஜக கணக்கு போடுகிறது.. எடப்பாடிக்கு நெருக்கடி தந்தால், அதிமுகவை பிளக்க முற்பட்டால் தங்களுக்கு 100 சீட்டை அதிமுக ஒதுக்கிவிடும் என்றும் பாஜக நம்புகிறது.

நல்ல சந்தர்ப்பங்கள்

இத்தனை காலமாக இல்லாமல், இப்போது எடப்பாடியே தங்களிடம் சரணாகதி அடைந்துள்ளதால், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொள்ள, இதைவிட வேறு ஒரு நல்ல சந்தர்ப்பமும் தங்களுக்கு கிடைக்காது என்று பாஜக நினைக்கிறது.

ஆனால் அதிமுக வெற்றி பெற்றாலும்கூட, பாஜக ஆட்சி என்பது சாத்தியமே கிடையாது.. அதிலும் தமிழ்நாடு, கேரளா இந்த இரு மாநிலங்களிலும் பாஜக நாட்டை ஆளவே முடியாது..

எடப்பாடியின் சம்பந்தி

அன்று கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில், இன்று இவர்கள் இருவருமே இல்லாத சூழலில், எடப்பாடியை எப்படியும் கையாளலாம் என்று பாஜக நினைக்கிறது.

எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி கர்நாடகாவில் மிகப்பெரிய ஒப்பந்தக்காரராக உள்ளார்.. ஆந்திரா, தெலுங்கானாவில் PWD ஹைவேஸில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்தக்காராக உள்ளதால், எடப்பாடிய துருப்புச்சீட்டாக பயன்படுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. எனவே அதிமுகவை எடப்பாடி காப்பாற்றுவாரா? அல்லது அதிமுகவை பாஜகவில் கரைப்பாரா? தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+