தமிழகத்தில் இன்று 7,987 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பும் அதிகரிப்பு.. 3 மாவட்டம் மிக மோசம்!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

தமிழகம் முழுவதும் இந்த முறை முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பில் இரண்டாயிரம், ஐந்தாயிரத்தை கடந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது 8,000-ஐ நெருங்கி விட்டது.

8,000-ஐ நெருங்கிய பாதிப்பு
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்களில் பயணிக்க கட்டுப்பாடு, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8,000-ஐ நெருங்கியுள்ளது.

29 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,999 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 4,176 பேர் குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?
இதுவரை மொத்தம் 8,91,839 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 58,097 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 93,995 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,05,44,549 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் அதிகரிக்கும் பாதிப்பு
கோவை, செங்கல்பட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 2,558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 685 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 534 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 203 பேருக்கும், மதுரையில் 234 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 473 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications