சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் பயணிப்போர் கவனத்திற்கு.. ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்
சென்னை: சென்னை கடற்கரை - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை (1 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரயில் சேவை ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னை கடற்கரையில் இருந்து இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12.28, 12.40, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களும், கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து இதே தேதிகளில் காலை 10.40, 11, 11.30, மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரயில்களும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரையில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.15, 1.15, 1.30, 2 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் சேவைகளும், தாம்பரத்தில் இருந்து மதியம் 12.05, 12.35, 1 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தெற்கு ரயில்வே நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில்: "சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காரைக்குடியில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12606) இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) பகுதி நேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே போல, மன்னார்குடியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16180) வருகிற 8-ந் தேதி பகுதிநேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12632) 8-ந் தேதி பகுதிநேரமாக செங்கல்பட்டு-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், மண்டபத்தில் இருந்து மாலை 5.55 மற்றும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16752, 22662) பகுதிநேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் (12694) 8-ந் தேதி பகுதிநேரமாக மாம்பலம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், புதுச்சேரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் பயணிகள் ரயில் பகுதிநேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635) இன்று மற்றும் நாளை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். அதே போல, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12759) 9-ந் தேதி தாம்பரத்திற்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22661) 9-ந் தேதி எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (17644) 8-ந் தேதி கொருக்குப்பேட்டை, பெரம்பூர், அரக்கோணம், காஞ்சீபுரம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது. அதே தேதியில், காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (17652) மேல்பாக்கம், காஞ்சீபுரம், வழியாக இயக்கப்படும். இந்த ரயில் அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20665) இன்று மற்றும் நாளை 15 நிமிடம் தாமதமாக எழும்பூரில் மதியம் 3 மணிக்கு புறப்படும்" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications