ஃபுல் போதையில் ஆபாச டான்ஸ்.. சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை.. மொத்தமாக கைது செய்த போலீஸ்!
பார் ஒன்றில் ஆபாச நடனம் ஆடிய 7 பெண்களை போலீசார் மீட்டனர்.
சென்னை: அந்த பாரில் எப்பவுமே இளசுகள்... சிறுசுகளின்... ஆபாச டான்ஸ்தான்.. தண்ணிய போட்டுவிட்டு, இளம்பெண்கள் ஆட... ஆட.. பாரில் கூட்டம் குவிந்தது!!
கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் சொகுசு பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் அதிகளவில் உள்ளது. இதில் அரும்பாக்கம் 100 அடி ரோடில் ஒரு பார் இயங்கி வருகிறது. இது தனியாருக்கு சொந்தமான சொகுசு பார் ஆகும்.

ஆபாச நடனம்
இங்குதான் இளம்பெண்கள் ஆபாச நடமாடி வருகிறார்கள் என போலீசாருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து தனிப்படை ஒன்று திடீரென்று அந்த பாருக்குள் நுழைந்தது. உள்ளே நுழையும்போதே குத்து பாட்டு சத்தம் காதைபிளந்தது. அங்கே பார்த்தால், இளம்பெண்கள் அரைகுறை டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள். ‘கரோக்கி' என்ற ஒரு வகையான பாடலுக்குதான் இந்த குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தார்கள்.

சட்டவிரோதமானது
எல்லா பெண்களும், ஆண்களும் ஃபுல் போதையில் இருந்தார்கள். ஏற்கனவே விடுதிகளில் இப்படியெல்லாம் ஆடல், பாடல் நடத்தக்கூடாது என்றும், அது சட்டவிரோதமானது என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அந்த சட்டடத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டுதான் இந்த ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

7 பெண்கள் மீட்பு
மொத்தம் அங்கே 10 பேர் கூத்தடித்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணையும் நடத்தினார்கள். அதில், இந்த பார் எந்தவித அனுமதியும் பெறாமல் நடத்தி வந்தது தெரியவந்தது. மேடையில் ஆடிக் கொண்டிருந்த 10 பேரில் 7 பேர் பெண்கள். அவர்களை மீட்டு மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

2 பேர் கைது
பார் மேலாளர் கரன்கேபிரியல் 40, பார் ஊழியர் தாமோதரன் 32, ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று ஆபாச நடனம் வேறு எங்காவது, எந்த சொகுசு பாரிலாவது நடக்கிறதா என போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications