மோடியின் "கனவு திட்டம்".. வீடு தேடி வருது.. கிராம மக்களுக்கு போன குட் நியூஸ்.. என்னன்னு பாருங்க!
சென்னை: ஜல் ஜீவன் திட்டம் நாடு முழுக்க செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பான முக்கிய புள்ளி விவரம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன், 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்தல் மற்றும் மறுபயன்பாடு போன்ற விஷயங்களை ஆய்வு செய்து குடிநீர் நிலைத்தன்மை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஜல் ஜீவன் மிஷன்: ஜல் ஜீவன் மிஷன் தண்ணீருக்கான தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. எஎல்லோருக்கும் குடிநீர் வசதி கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். ஜல் ஜீவன் மிஷன் திட்டம் முக்கியமாக வடமாநிலங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அங்குதான் குறைவான தண்ணீர் பயன்பாடு, குடிநீர் வசதி உள்ளது.
இதனால் வடமாநிலங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த திட்டம் கவனம் செலுத்தி வருகிறது. ஜல் ஜீவன் திட்டம் நாடு முழுக்க செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பான முக்கிய புள்ளி விவரம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 2019 இல், 16.82% கிராமப்புற குடும்பங்கள் குழாய் நீர் இணைப்புகளைக் கொண்டுள்ளன. நவம்பர் 2023 வாக்கில், இந்த எண்ணிக்கை 70% ஆக உயர்ந்தது என்று ஜல் ஜீவன் மிஷன் தெரிவித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டங்களில் இது ஒன்றாகும். 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டுக் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் தரவுகளின்படி, நாட்டில் உள்ள 19,24,26,914 கிராமப்புற குடும்பங்களில், 13,47,50,894 குடும்பங்களுக்கு இதுவரை குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 100 சதவீத கவரேஜையும், 10 மாநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான கவரேஜையும், 11 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கவரேஜையும், நான்கு மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான அளவிலும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகள் 32.36 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைந்த குழாய் நீர் இணைப்பு கவரேஜைக் கொண்டுள்ளது.
வரும் நாட்களில் இங்கே அதிக கவனம் செலுத்தி நீர் இணைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2019 இல், 16.82% கிராமப்புற குடும்பங்கள் குழாய் நீர் இணைப்புகளைக் கொண்டுள்ளன. நவம்பர் 2023 வாக்கில், இந்த எண்ணிக்கை 70% ஆக உயர்ந்தது என்று ஜல் ஜீவன் மிஷன் தெரிவித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications