திருப்போரூர் கோயிலுக்கு சொந்தமான 700 கோடி நிலம்.. 100 ஆண்டுகளுக்கு பின் அதிரடியாக மீட்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 21ம் தேதி பிறப்பித்த உத்தரவில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறைக்குக் கெடு விதித்துள்ளது. இதையடுத்து திருப்போரூரில் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 700 கோடி மதிப்புள்ள 240 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் 100 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோவில் திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 550 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் மதிப்பு பல 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இவை சுமார் 100 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தது.

அந்த குறிப்பிட்ட நிலங்களை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெகநாத் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்பதால், ஜெகநாத் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமனற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு கடந்த ஜனவரி 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை தரப்பில், 'கோவிலுக்கு சொந்தமான 125 ஏக்கர் நிலத்தை 233 பேர் ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்பாளர்களில் சிலர் வாடகை செலுத்த முன்வந்திருக்கிறார்கள். அதனால், ஆக்கிரமிப்புகளை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.
அரசின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 'வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை எப்படி வரன்முறை செய்ய முடியும்? 2 ஆண்டுகளுக்குக்கும் மேலாக ஆக்கிரமிப்புகளை மீட்டு அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?' என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர், 3 வாரத்தில் ஆக்கிரமிப்புகளை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். அடுத்த வாரம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது அரசின் வருவாய் துறை தரப்பும், அறநிலையத்துறை தரப்பும் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தே ஆக வேண்டும் என்று கெடு உள்ளது.
இந்த சூழலில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, 27 அரசு அதிகாரிகள், 49 தொழிலதிபர்கள் மற்றும் 38 செல்வாக்கு மிக்க நபர்கள் இந்த கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனிடையே திருப்போரூரில் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 700 கோடி மதிப்புள்ள 240 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் 100 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அதிரடியாக மீட்கப்பட்டது. அங்கு திருப்போரூரில் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் என்றும் ஆக்கிரமிக்க முயன்றால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications