படிப்படியாக குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 3,924 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 723 பேர் பாதிப்பு
சென்னையில் இன்று 723 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 723 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199173-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தொற்று வேகமாக குறைந்து வருகிறது... அதேபோல டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது.. இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிதான் காரணம்..

இனி வரும் காலங்களில் இந்த தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது குறைவாகவே பாதிப்பு கண்டறியப்பட்டு வருவது ஆறுதலை தந்து வருகிறது.
இன்று தமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,22,011ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,87,388 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. இன்று மட்டும் 3,924 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல, தமிழகத்தில் கொரோனாவால் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆகும்.. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக சென்னையில் வழக்கம்போல் அதிக பாதிப்பு காணப்படுகிறது.. சென்னையில் இன்று மட்டும் 723 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199173-ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு 158 பேரும், கோயம்புத்தூரில் 228 பேரும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளர்.. அதேபோல ஈரோட்டில் 115 பேரும், சேலம் மாவட்டத்தில் 114 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 149 பேரும், திருப்பூரில் 145 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிக பாதிப்பு உள்ளது.. மற்ற மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திலேயே பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications