Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.. அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு இணையவாசிகளின் கவனத்தை பெற்று வருகிறது.. அது என்ன தெரியுமா?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.. இதுவரை சுமார் 4100-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்..

VijayaPrabhakaran NetWorth Virudhunagar DMDK TNElection2026 DebtDetails Premalatha Vijayakanth Nomination 2026

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், துரைமுருகன் என முக்கிய தலைவர்கள் பலரும் வரிசையாக கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்தனர்.. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தான்.. அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

விருதுநகர் விஜய பிரபாகரனின் கடன்

விஜய பிரபாகரனின் மொத்த சொத்து மதிப்பு 28 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதில் கையில் இருக்கும் பணம், வங்கி இருப்பு, நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 19.70 கோடி ரூபாய் ஆகும்.. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களின் மதிப்பு 9 கோடி ரூபாய் என கணக்கு காட்டப்பட்டுள்ளது.

சொத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர் பெயரில் இருக்கும் கடன் விவரங்கள் தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.. தனக்கு 41.51 கோடி ரூபாய் கடன் இருப்பதாக விஜய பிரபாகரன் தனது வேட்புமனுவில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.. அதாவது தனது மொத்த சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு கூடுதலாக அவர் கடன் வைத்துள்ளார்.. கேப்டன் விஜயகாந்தின் அரசியல் வாரிசாக களம் இறங்கியுள்ள விஜய பிரபாகரன், முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

சொத்து விவரங்கள்

இந்த முறை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.. தேமுதிக வரலாற்றிலேயே முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது..

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்..

அதே விருத்தாசலத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் போன்றோரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.. தர்மபுரியில் சவுமியா அன்புமணி களம் காண்கிறார்.. இப்படி விஐபி வேட்பாளர்கள் பலரும் களத்தில் இருப்பதால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், விஜய பிரபாகரனின் இந்த சொத்து மற்றும் கடன் விவரங்கள் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.

சட்டசபைக்குள் நுழைவாரா

தேர்தல் நெருங்கி வருவதால் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.. கடந்த தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த விஜய பிரபாகரன், இந்த முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு தேமுதிக தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.

விஜயகாந்த் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகிய இருவரின் வெற்றி தோல்வி தேமுதிகவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+