Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று 790 பேருக்கு கொரோனா.. சென்னையில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,24,776 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை!

    தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்படுகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    790 people in Tamil Nadu have been diagnosed with corona infection

    தமிழகத்தில் மேலும் 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்த பாதிப்பு 8,24,776 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 897 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,05,136 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, மொத்த பலி எண்ணிக்கை 12,208 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னையில் இன்று ஒரே நாளில் 208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,27,353 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 1,46,95,106 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 64,231 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 7,432 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+